இலங்கைக்கு சொந்தமான பருத்தித்துறை கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ட்ரோலர் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலும், குறித்த மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் மீன்பிடி மற்றும் நீர்வள திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.