தீபாவளி தினத்தில் 7 வயது சிறுமிக்கு இந்தியாவில் நடந்த கொடூரம்!

19 Nov, 2020 | 10:13 AM
image

இந்தியாவில் ஏழு வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதுடன்  மூடநம்பிக்கையான சடங்கிற்காக அவரது உடற்கூறுகள் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான உச்சக்கட்ட பாலியல் வன்கொடுமை இடம்பெறும் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

தீபாவளி தினத்தன்று இரவு பட்டாசு வாங்குவதற்காக கடைக்கு சென்ற போது சிறுமி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து அவரை தேடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை அவரது உடலின் எச்சங்கள் ஒரு காட்டில், அருகிலுள்ள மரத்தின் கீழ் துணிகளைக்கொண்டு மூடப்பட்ட நிலையில் கிராமவாசிகளால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாணைகளில் தெரியவந்துள்ளதாவது,

நீண்டநாட்கள் குழந்தைகள் இல்லாத ஒரு தம்பதிக்கு, கருத்தரிக்கும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு மூடநம்பிக்கையான சடங்கிற்காக  சிறுமி கடத்தப்பட்டு கல்லீரல் மற்றும் நுரையீரலை வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தனது மாமனாரின் அறிவுரைக்கு அமைய மருமகனின் இரு நண்பர்களால் குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளதுடன், சிறுமியின் உடற் பாகங்கள் அகற்றப்படுவதற்கு முன்பாக அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள குறித்த கொலையாளிகள் தெரிவித்துள்ளனர்.

இவ் சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி மற்றும்  கணவரின் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கொலையாளிகளில் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 உத்தர பிரதேச முதல்வர் சம்பவம் தொடர்பில் விரைவாக நீதிமன்ற வழக்கு ஒன்றைக் கோரியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பில் இந்தியாவில் நீதித்துறை செயல்பாட்டின் தாமதங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பிரச்சினையாகும், இச் சம்பவம் இந்தியாவிற்கு மோசமான நற்பெயரைக் கொடுப்பதாக அமைவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52