மயிரிழையில் உயிர் தப்பிய குஷ்பு

Published By: Jayanthy

18 Nov, 2020 | 07:49 PM
image

நடிகை குஷ்பு பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் முருகன் வேல் யாத்திரை ஒன்றை முன்னெடுத்து வரும் நிலையில் நடிகை குஷ்பு இந்த வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனது காரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நோக்கி பயணித்துள்ளார்.

நடிகை குஷ்பு சென்ற கார் மேல்மருவத்தூர் அருகே விபத்து.. குஷ்புவின் நிலை  என்ன? வைரலாகும் டிவிட்டர் பதிவு - TamilSpark

அவர் பயணித்த கார் மதுராந்தகம் அருகே உள்ள அய்யனார் கோவில் என்ற இடத்தை அன்மித்தப்போது  முன்னால் கண்டெய்னர் லொரி ஒன்று சென்று கொண்டிருந்தது. 

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த கண்டெய்னர் லொரியை குஷ்பு பயணித்த கார் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிர்பாராத விதமாக கண் இமைக்கும் நேரத்துக்குள் காரில் இடது பக்கத்தில் கண்டெய்னர் லொரி வேகமாக மோதியுள்ளது.

சிறிது தூரம் வரை கண்டெய்னர் லொரி காருடன்  உரசியபடியே சென்றுள்ளது. இதில் காரின் பின் இருக்கை பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. 

காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த குஷ்பு அதிர்ச்சி அடைந்ததுடன் உடனடியாக குஷ்புவின் கார் ஓட்டுனர்  சாமர்த்தியமாக காரை திருப்பி ஓரமாக நிறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக குஷ்பு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கண்டெய்னர் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

எனினும் இது திட்டமிட்ட தாக்குதல் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

Header media

இது தொடர்பாக குஷ்பு தெரிவித்துள்ளதாவது,

விபத்து நடைபெற்ற விதத்தை பார்க்கும் போது என் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் போலவே தெரிகிறது. என்னை கொல்வதற்கு சதி நடந்திருப்பதாகவே நான் உணருகிறேன்.

விபத்து பற்றி போலிசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய போதிலும் குஷ்பு தனது பயண திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. மாற்று கார் வரவழைத்து திட்டமிட்டபடி கடலூரில் நடக்கும் வேல் யாத்திரையில் கலந்து சென்றுள்ளார்.

இதே வேளை இவ் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள போதிலும் பா.ஜ.க.வினர் தடையை மீறி யாத்திரை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52