வடக்கு அரபிக்கடலில் 2 ஆம் கட்ட மலபார் போர் பயிற்சி

Published By: Digital Desk 3

18 Nov, 2020 | 03:16 PM
image

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா  உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் 2ஆம் கட்ட மலபார் போர் பயிற்சி வடக்கு அரபிக்கடல் பகுதியில் நேற்று ஆரம்பமானது.

இந்த போர் பயிற்சி எதிர்வரும்  3 நாட்களுக்கு  நடைபெறவுள்ளது.

முதல்கட்ட மலபார் கூட்டுப்பயிற்சி வங்கக்கடல் பகுதியில் கடந்த 3ஆம் திகதி  முதல் 4 நாட்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இதன் 2ஆம் கட்ட பயிற்சி வடக்கு அரபிக்கடல் பகுதியில் நேற்று  முதல் ஆரம்பமாகியுள்ளது

இதில் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘விக்ரமாதித்யா’, அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘நிமிட்ஸ்’ ஆகியவற்றை மையப்படுத்தி ஏனைய  நாடுகளின் போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்குவது தொடர்பான அதிநவீன பயிற்சிகளும் இதில் இடம்பெறுகின்றன.

இந்திய போர்க்கப்பல்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை மேற்கு மண்டல கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் தலைமையில் பங்கேற்கும் என இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10