டுபாயில் சிக்கியிருந்த 280 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Published By: Digital Desk 4

18 Nov, 2020 | 03:55 PM
image

(க.பிரசன்னா)

ஐந்து விசேட விமானங்களின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் செயற்பாட்டின் முதல் கட்டமாக இன்று புதன்கிழமை 280 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயிலிருந்து குறித்த 280 இலங்கையர்களும் அழைத்து வரப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. 

இவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் விசேட அனுமதியின் பேரில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை ஐந்து விமானங்களின் மூலம் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் இன்று முதலாவது விமானம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள நிலையில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இத்தாலியிலிருந்து 100 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அத்துடன், 297 இலங்கையர்கள் நவம்பர் 21 ஆம் திகதி கட்டாரிலிருந்து அழைத்துவரப்படவுள்ளதுடன் மேலும் 297 இலங்கையர்கள் நவம்பர் 23 ஆம் திகதி குவைத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட உள்ளனர். நவம்பர் 26 ஆம் திகதி 290 இலங்கையர்கள் ஓமானில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் வெளிநாட்டு அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் விசேட அனுமதியின் அடிப்படையில் துபாயில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஐந்து விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் இவ்வாரம் ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08