வெல்லவாய பலஹருவ பகுதியில் காட்டு யானைத் தாக்கியதில் ஒன்பது வயதான சிறுமியொருவர்  உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி அவரது பாட்டனாருடன் பாடசாலைக்கு சென்ற போது இருவரும் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த சிறுமியின் பாட்டனார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.