பாகிஸ்தான் வைத்தியர்களுக்கு சவுதி அரேபியா விருது வழங்கி கெளரவிப்பு

18 Nov, 2020 | 02:45 PM
image

கொரோனா வைரஸ் பரவலின் போது சவுதி அரேபிய நாட்டுக்கு ஆற்றிய சேவைகளுக்காக பாகிஸ்தான் மருத்துவர்களுக்கு சவுதி அரேபியா அரசு தலைமைத்துவ விருதை வழங்கி கெளரவித்துள்ளது. சவுதி அரேபியாவில், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் குழுவை பாகிஸ்தான் மருத்துவர் வழிநடத்தியதாக அரபு செய்தி கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.

விருதைப் பெற்ற வைத்தியர் ஷாஜாத் அஹ்மத் மும்தாஸ், ரியாத்தில் உள்ள கிங் சல்மான் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவின் தலைவராக கடமையாற்றுகிறார். செப்டம்பர் 23, சவுதி அரேபியாவின்  தேசிய தினத்தன்று சவுதி சுகாதார அமைச்சகம் அவருக்கு இவ்விருதை வழங்கி கெளரவித்தது.

கிங் சல்மான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவின் (ஐ.சி.யூ) தலைவராக எனது சேவைகளை அங்கீகரிப்பதற்காக, சவுதி சுகாதார அமைச்சகத்தால் எனக்கு தலைமை விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது, ”என்று மும்தாஸ் "அரப் நியூஸ் " இக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.மும்தாஸ் பாகிஸ்தான்  பஞ்சாபில் உள்ள லயா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். கடந்த 18 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். அவர் கிங் சவுத்  மெடிக்கல் சிட்டியில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் , சுகாதார அமைச்சின் பொது சுகாதார நிபுணராக பணியாற்றி வருகிற பாகிஸ்தானிய மூத்த சுகாதார நிபுணரான வைத்தியர் ஜியா உல்லா கான் தாவர் சவூதி அரேபியாவின் கொரோனா வைரஸுக்கு  எதிராக  ஒரு வலுவான கண்காணிப்பு முறையை வடிவமைப்பதில் மும்முரமாக ஈடுபாடு கொண்டவர். புனித நகரமான மக்காவில் சர்வதேச பயணிகளுக்கான முதல் தனிமை மையத்தை நிறுவ நியமிக்கப்பட்ட குழுவில் உறுப்பினராகவும்  இவர் பணியாற்றியுள்ளார்.

அவரது சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், சுகாதார அமைச்சகம் அவருக்கு “கொவிட் -19 அணியின் கேப்டன்” பதக்கத்தை வழங்கி கெளரவித்துள்ளது.

இவ்விரு விருதுகளும் தனிநபர்களை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், சவுதி அரேபியா - பாகிஸ்தான் உறவுகளுக்கு பெருமை சேர்க்கும் தருணமாகவும் கருதப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52