இன்று முதல் வீரகேசரியின் அடுத்த வெற்றிப் பயணம்

Published By: Gayathri

18 Nov, 2020 | 12:18 PM
image

இலங்கையின் பழம்பெரும் ஊடக நிறுவனமாக விளங்கும் வீரகேசரி தனது 90 ஆவது அகவையைக் கடந்து வெற்றி நடைப்போடும் இத்தருணத்தில் அதன் மற்றுமொரு பாரிய வளர்ச்சியாக இன்று தொடக்கம் தொலைக்காட்சி செய்தியிலும் காலடி எடுத்து வைக்கின்றது.

அந்த வகையில் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சி சேவையில் நாளாந்தம் இரவு 7 மணிக்கு வீரகேசரி ஸ்டார் தமிழ் செய்திகள் ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது என்பதை எமது அன்பார்ந்த நேயர்களுக்கு தெரிவிப்பதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

வீரகேசரி நிறுவனம் உலகின் நவீன மாற்றங்களை தன்னகத்தே ஈர்த்து உலகின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு தன்னாலான சிறந்த செய்தி சேவையை ஆற்றி வருகின்றமை அனைவரும் அறிந்ததே.  

குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக இணையவழியில் உலக தமிழ் மக்களை ஒன்றிணைத்து வழங்கிவரும் செய்திச் சேவை இன்று பலராலும் பாராட்டப்பட்டுவரும் ஒன்று.

இதன் மூலம் சிறந்த இணையதளம் என்ற விருதையும் பல தடவைகள் வீரகேசரி தட்டிக் கொண்டது. 

இவை அனைத்துக்கும் மேலாக புதிதாக அறிமுகம் செய்துள்ள செய்தி ஒளி ஒலிபரப்புச் சேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

பல்வேறு புதுமைகளை புகுத்துவதிலும் நம்பகரமான செய்திகளை உடனுக்குடன் வழங்குவதிலும் virakesari.lk இணையத்தளம் முன்னிலை பெற்றுள்ளமை மக்கள் அறிந்ததே .

இன்றைய  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகில் எத்தனையோ பாரிய நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ள நிலையில், வீரகேசரி நிறுவனம் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தனது சேவையை தொடர்ந்து வருவதற்கு பிரதான காரணம்; உண்மையில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவும் அரவணைப்பும் என்றால் மிகையில்லை .

இவை அனைத்திற்கும் வீரகேசரி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை மற்றும் முகாமைத்துவ இயக்குனர் குமார் நடேசன் ஆகியோரின் வழிகாட்டல்கள் முக்கியமானவை என்றே கூறவேண்டும்.

1930 ஆம் ஆண்டு வீரகேசரி என்ற விதை தென்னிந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் செட்டியாரினால் மண்ணில் ஊன்றப்பட்டது. 

அன்றுதொட்டு தழைத்தோங்கி பெரும் விருட்சமாக விளங்கும் வீரகேசரி இன்று பல்லாயிரக்கணக்கான  தமிழ் பேசும் மக்களின் அறிவுப்பசிக்கு தீனி போடுவது மாத்திரமன்றி சிறந்த செய்தி ஊடகமாகவும் விளங்குகின்றது.

அத்துடன் அதை நம்பி வாழும் நூற்றுக்கணக்கான குடும்பங்களையும் வாழ வைத்து வருகிறது.  

தனித்துவமான பாதையில் தெளிவான செய்திகளை வழங்கி வரும் வீரகேசரி அதன் 90 வருட பூர்த்தியை தொடர்ந்து தொலைக்காட்சி சேவையிலும் கால் பதித்துள்ளது.

தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் ஊடகமாக வலம்வரும் வீரகேசரி நிறுவனம், தமிழ் பேசும் மக்களின் உரிமைக்கு பாதுகாவலனாகவும் விளங்குகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போதைய டிஜிட்டல் உலகிலும் வீரகேசரி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது.

வீரகேசரி நிறுவனம் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் பேசும் மக்களுக்காக இணையதளத்தை ஆரம்பித்தது.  

இதன் மூலம் இலங்கையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் செய்தி இணையதளம் என்ற பெருமையும் இலங்கையில் முதல் முதலாக செயல்படுத்தப்பட்ட மின்னிதழ் என்ற பெருமையும் வீரகேசரியைச் சாரும்.

தமிழ் பேசும் மக்கள் பலரும், அனைத்து வகையிலும் வீரகேசரி  நிறுவனத்துக்கு வழங்கி வரும் ஆதரவு அதன் அனைத்து வகையான வளர்ச்சிக்கும் பேருதவியாக அமைந்துள்ளது.

அந்தவகையில் முதல் முறையாக தனது ஊடகத்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக  தொலைக்காட்சி செய்திகளிலும் காலடி எடுத்து வைத்திருப்பது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22