ஹிஜாப்பை காவல்துறை சீருடையில் அறிமுகப்படுத்திய நியூஸிலாந்து

Published By: Vishnu

18 Nov, 2020 | 11:33 AM
image

நியூஸிலாந்து காவல் துறையில் முஸ்லிம் பெண்களை இணைத்துக் கொள்ளும் ஊக்குவிப்பு நடவடிக்கையாக நியூஸிலாந்து காவல் துறையின் அதிகாரப்பூர்வ சீருடையில் ஹிஜாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி புதிதாக ஆட்சேர்க்கப்பட்ட கான்ஷ்டபிள் ஜீனா அலி அதிகாரப்பூர்வமாக ஹிஜாப்பை அணிந்த முதல் நியூஸிலாந்து பெண் பொலிஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக லண்டனில் உள்ள பெருநகர காவல்துறை மற்றும் ஸ்கொட்லாந்து பொலிஸ் போன்ற பிற படைகள் ஒரு சீரான ஹிஜாப் அணிவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அது மாத்திரமன்றி அவுஸ்திரேலியாவின், விக்டோரியா காவல்துறையின் மகா சுக்கர் என்ற பெண் பொலிஸ் அதிகாரி 2004 இல் ஹிஜாப் அணிந்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே நியூஸிலாந்து காவல்துறையில் ஹிஜாப் அணிவதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுளளது.

இடைநிலைப் பள்ளிகளுக்குச் சென்ற பெண் காவல்துறை ஊழியர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஹிஜாப்பை அதன் சீருடையில் உள்வாங்குவதற்கான பணிகள் தொடங்கியதாக நியூசிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இந் நிலையில் நியூஸிலாந்தில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை கான்ஷ்டபிள் ஜீனா அலி பெற்றுள்ளார்.

பிஜியில் பிறந்து குழந்தையாக நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்த அலி, நியூசிலாந்து ஹெரால்டிடம், கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு காவல்துறையில் சேர முடிவு செய்ததாக கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17