போலிச் செய்திகளை பரப்பிய வெளிநாட்டவர்களை கண்டுபிடிக்க இன்டர்போலின் உதவி

Published By: Digital Desk 3

18 Nov, 2020 | 05:37 PM
image

இலங்கையில் கொரோனா வைரஸ் மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளை பரப்பிய  ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்களை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்டர்போல்' என அழைக்கப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் வீதிகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி, பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் போலிச் செய்திகள் பரப்பப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அந்த பதிவுகளில் இலங்கையில் கொரோனா பரவுவதை  சுகாதார அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், போதிய மருத்துவ சிகிச்சை இல்லாததால் ஏராளமானோர் வீதிகளில்  இறந்து  கிடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறிப்பிட்ட போலி செய்திகள் தொடர்பில் குற்றப்புலானாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்து கடுகண்ணாவை மற்றம் ஹந்தானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு உள்ளூர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து மேலும் இரண்டு நபர்கள் ஈடுப்பட்டுள்ளதாக தடயவியல் கணிணி நிபுணர்களின் கூற்றுப்படி தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் போலி செய்திகளைக் கொண்ட பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். எனவே, அவற்றைக் கண்டுபிடிக்க  'இன்டர்போல்' என அழைக்கப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் உதவியை நாடும்.

சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் தொடர்பாக சமூகவைலைத்தளங்களில்  செய்தி வெளியிடவோ அல்லது அனுப்பவோ கூடாது என்று செய்தித் தொடர்பாளர் கேட்டுக்கொண்டார். “இதுபோன்ற பதிவுகள் சரியானதா என்பதை மக்கள் சரிபார்க்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் ஒரு குற்ற வழக்கின் சந்தேக நபராகலாம், ”என  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22