யாழ். பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

17 Nov, 2020 | 07:57 PM
image

(எஸ்.தில்லைநாதன்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் தெற்கை சொந்த இடமாகவும், துன்னாலை வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவனே இன்று பிற்பகல் சடலமாக மீட்கபட்டுள்ளார்.

குறித்த மாணவன் கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி தமது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவன் இன்று வகுப்புகளுக்குச் சமுகமளிக்காததால் அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டுள்ளனர். தொடர்சியாக அழைப்புகளை மேற்கொண்டபோதும் அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த நண்பர்கள் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே, அவருடைய நண்பர்கள் கதவை உடைத்து உட்சென்று பார்த்தபோது குறித்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டதையடுத்து கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10