கடந்த அரசாங்கத்தை விமர்சித்து அரச நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது - அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல

Published By: Gayathri

17 Nov, 2020 | 03:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

யாருடைய தலைமையிலான அரசாங்கம் தோல்வி என்பதை நன்கு அறிந்தே நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். 

கடந்த அரசாங்கத்தை விமர்சித்து அரச நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இணையவழியூடாக இடம்பெற்றது. 

இதன் போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கமும் ஜனாதிபதியும் தோல்வி  என்று எதிர்தரப்பினர் அரசியல் பிரசாரம் செய்து கொள்கிறார்கள். 

எவர் தலைமையிலான அரசாங்கம் தோல்வி என்பதை அறிந்தே நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

தற்போதைய எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருக்கும்போது, 2005 தொடக்கம் 2015 வரையிலான அரசாங்கத்தை விமர்சிப்பதில் அதிக அக்கறை காட்டினார்கள். இதனால் பாரிய விளைவுகள் ஏற்பட்டன.

நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சித்து அரச நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை  கொண்டுள்ளார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43