ரவிராஜ் படு­கொலை விவ­காரம்: சந்­தே­க­ ந­பர்கள் மூவர் இல்­லாமல் விசா­ர­ணை­களை தொடர தீர்­மானம் 

Published By: Priyatharshan

27 Jul, 2016 | 09:26 AM
image

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் மற்றும் அவ­ரது மெய்­பா­து­காவல­ராக இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் லக் ஷ்மன் ஆகி­யோரை படுகொலை செய்த விவ­காரம் தொடர்பில் மன்றை புறக்­க­ணித்து வரும் மூன்று பிர­தி­வா­திகள் இல்­லா­ம­லேயே, அவர்­க­ளுக்கு எதி­ரான சாட்சி விசா­ர­ணை­களை நடாத்த கொழும்பு மேல் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது.

இது குறித்த அறி­விப்பை கொழும்பு மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க விசா­ர­ணை­ய­றையின் நீதி­பதி மணிலால் வைத்­திய திலக நேற்று அறி­வித்தார்.

ரவி ராஜ் படு­கொலை விவ­காரம் தொடர்பில் 6 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக சட்ட மா அதிபர் கடந்த வாரம் கொழும்பு மேல் நீதி­மன்றில் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்தார்.

பழனிச் சாமி சுரேஷ், ஹெட்டி ஆரச்­சிகே பிரசாத் சந்­தன குமார, காமினி சென­வி­ரத்ன, பிரதீப் சமிந்த, சரன் எனப்­படும் சிவ­காந்தன் விவே­கா­னந்தன், பெபியன் வொய்ஸ்டன் டூசைன் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவே சட்ட மா அதி­பரால் பயங்­க­ர­வாத தடை சட்டம் மற்றும் தண்­டனை சட்டக் கோவையின் விதி­வி­தா­னங்­க­ளுக்கு அமை­வாக இந்த குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டது.

சட்ட மா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய சார்பில் கொழும்பு மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க விசா­ரணை அறையின் நீதி­பதி மணி லால் வைத்­தி­ய­தி­லக முன்­னி­லையில் பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய இந்த குற்றப் பத்­தி­ரி­கையை தாக்கல் செய்தார்.

இந் நிலையில் வழக்கின் 2 ஆம், 3 ஆம் மற்றும் நான்காம் பிர­தி­வா­தி­க­ளான ஹெட்டி ஆரச்­சிகே பிரசாத் சந்­தன குமார, காமினி சென­வி­ரத்ன, பிரதீப் சமிந்த, ஆகியோர் மட்­டுமே ஆஜ­ரான நிலையில் அவர்­களை வழக்­கா­னது முடி­வ­டையும் வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்ட நீதி­பதி மணிலால் வைத்­தி­ய­தி­லக, தலை­மை­றை­வா­கி­யி­ருக்கும் முதலாம் 5 ஆம் மற்றும் 6 ஆம் பிர­தி­வா­தி­க­ளான பழனிச் சாமி சுரேஷ், சரன் எனப்­படும் சிவ­காந்தன் விவே­கா­னந்தன், பெபியன் வொய்ஸ்டன் டூசைன் ஆகி­யோரை மன்றில் ஆஜ­ராக அறி­வித்தல் (நோட்டிஸ்) விடுத்தும் உத்­த­ர­விட்டார். இது குறித்த வழக்கு நேற்று மீளவும் மேல் நீதி­மன்றின் நீதி­பதி மணிலால் வைத்­தி­ய­தி­லக முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

நீதி­மன்ரம் கடந்த வாரம் வெளி­யிட்ட அறி­வித்­த­லுக்கு அமை­வா­க­வேனும் தலை மறை­வா­கி­யுள்ள சந்­தேக நபர்கள் நேற்றும் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை. இதன்­போது சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய ஆஜ­ரா­கி­யி­ருந்­த­துடன், மன்றில் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் ஆஜர் செய்­யப்­பட்ட கடற்­படை வீரர்­க­ளான மூன்றாம், நான்காம் சந்­தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அனோஜ பிரே­ம­ரத்­னவும் 2 ஆம் பிர­தி­வாதி தொடர்பில் யுவான் லிய­னகே உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் குழுவும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்.

பாதிக்­கப்­பட்ட தரப்­பான நட­ராஜா ரவிராஜ் குடும்­பத்­தினர் சார்பில்இ சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான ஆர்னோல்ட் பிரி­யந்தன், குகராஜ், துஷ்­யந்தன் ஆகியோர் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்.

மன்றில் ஆஜ­ரான அரசின் பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய,

இந்த வழக்கை பொறுத்­த­வரை குற்றப் பத்­தி­ரிகை தாக்கல்ச் எய்­யப்ப்ட்­டுள்ள அறு­வரில் மூவர் தொடர்ந்தும் தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில் அவர்­க­ளுக்கு சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக மேல் நீதி­மன்றும் அறி­வித்தல் விடுத்தும் அவர்கள் ஆஜ­ரா­க­வில்லை என்­பதை சுட்­டிக்­காட்­டினார்.

இதனால் அவர்கள் இல்­லா­ம­லேயே குற்­ற­வியல் சட்­டத்தின் 241 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக அவர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­யங்­களை மன்ரில் விசா­ரணை செய்ய நீதி­மன்ரம் தீர்­மா­னிக்க வேண்டும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­ய­டுத்து அதனை ஏற்­றுக்­கொண்ட நீதி­பதி மணி லால் வைத்­திய திலக தலை­ம­றை­வா­கி­யுள்ள பிர­தி­வா­திகள் இல்­லா­ம­லேயே ரவி ராஜ் படு­கொலை வழக்கை விசா­ரணை செய்­வது என தீர்­மா­னித்தார். இந் நிலையில் இது குறித்த வழக்கு எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 2 ஆம் திகதி மீளவும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

முன்­ன­தாக கடந்த வாரம் பிர­தி­வா­திகள் 6 பேருக்கும் எதி­ராக 5 குற்றச் சாட்­டுக்­களை முன்­வைத்து குற்றப் பத்­தி­ரி­கை­யா­னது சட்ட மா அதி­பரால் தாக்கல் செய்­யப்­பட்­டது. 2006.11.9 ஆம் திக­திக்கும் 2006.11.10 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் விதி விதா­னங்­க­ளுக்கு அமை­வா­கவும் தண்­டனை சட்டக் கோவையின் உறுப்­பு­ரை­க­ளுக்கு அமை­வா­கவும் படு கொலை, சதித் திட்டம் தீட்­டி­யமை, சட்ட விரோத கூட்­டத்தில் அங்­கத்­த­வ­ராக இருந்தல் உள்­ளிட்ட 5 குற்றச் சாட்­டுக்கள் தாக்கல் செய்­யப்ப்ட்­டுள்­ளன.

இது தொடர்பில் 19 ஆவ­ணங்­களின் பட்­டி­ய­லையும் 65 சாட்­சி­யா­ளர்­களின் பட்­டி­ய­லையும் இதன்­போது பிரதி சொலி­சிற்றர் ஜெனரால் மன்­றுக்கு கைய­ளித்­துள்ளார்.

மேல் நீதி­மன்றில் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்ட பின்னர் உள்ள சம்­ப­ர­தா­யங்­களின் படி மன்றில் ஆஜ­ரா­காத மூவ­ருக்கும் மீள அறி­வித்தல் விடுக்க வேண்டும். இந் நிலை­யி­லேயே கடந்த வாரம் மன்ரில் ஆஜ­ரா­காத மூன்று பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக அறி­வித்­தலும் விடுக்­கப்­பட்­டது. அதனை அவர்கள் கருத்தில் கொள்­ளாத பட்­சத்தில் குற்­ற­வியல் நடை முறை சட்டக் கோவையின் 241 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் அவர்கள் இல்­லா­ம­லேயே அவர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­யங்­களை ஆராய நேற்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுட்டுக் கொல்­லப்ப்ட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் மற்றும் அவ­ரது மெய் பாது­கா­வலர் லக்ஷ்மன் ஆகி­யோ­ரது கொலைகள் தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை நடத்­தி­யது. அதன்­படி குறித்த இரட்டைக் கொலை தொடர்பில் கடற்படையின் நான்கு அதிகாரிகளையும் கருணா குழுவினரின் இரு அங்கத்தவர்களையும் பொலிஸ் உளவுப் பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவரையும் மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரையும் பொலிஸார் சந்தேக நபர்களாக கருதி, நீதிவான் நீதிமன்றில் சுருக்க முறையற்ற வழக்கு விசாரணைகளை நடத்தினர்.

அதன் முடிவில் 6 சந்தேக நபர்களை பிரதிவாதிகளாக பெயரிடுவது என தீர்மானித்துள்ள சட்ட மா அதிபர் நேற்று அதற்கான குற்றப் பத்திரிகையை கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50