12 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று: இந்தியா - சீனாவுக்கு மீண்டும் வாய்ப்பு

Published By: Vishnu

17 Nov, 2020 | 08:59 AM
image

கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் ரஷ்யா தலைமை தாங்கும் 12 ஆவது பிரிக்ஸ் ஒத்துழைப்பு மாநாடு இன்று காணொளி மூலமாக இடம்பெறவுள்ளது.

இதன்போது கொவிட் -19 நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், சுகாதாரம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் கடந்த ஆறு மாதங்களாக கிழக்கு லடாக்கில் தொடரும் எல்லை மோதல் குறித்து ஒரு வலுவான இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-சீனா எல்லை மோதல் கடந்த மே மாதத்தில் ஆரம்பமாகியதிருந்து மோடியும் ஜி யும் ஒரே மெய்நிகர் மாநாட்டில் கலந்து கொள்வது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

நவம்பர் 10 ம் திகதி, ரஷ்யா நடத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மெய்நிகர் உச்சி மாநாட்டில் மோடியும் ஜி யும் பங்கேற்றிருந்தனர். 

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

2019 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 11 ஆவது மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற்றது.

இந்நிலையில் பிரிக்ஸ் அமைப்பின் 12 ஆவது மாநாடு இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்தது. எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான மாநாடு காணொளி காட்சி மூலம் இன்று நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாட்டில், உலக நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி தொடர்பான தலைப்புகளில் விவாதம் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52