மேயர் ரோஷிக்கு வந்த சந்தேகம்

Published By: Vishnu

17 Nov, 2020 | 08:32 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் இதுவரை கண்டுபிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையை பார்க்கும்போது 30 ஆயிரம் பேர் வரையான தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது என கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்தாா்.

கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து இனம் காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர அதிகார பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமைவரை கொரேனா தொற்றாளர்கள் 4 ஆயிரத்தி 100 பேர் வரை இனம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சனிக்கிழமை மாத்திரம் மாநகர எல்லையில் 97 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை 25 க்கு அதிக மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.

தற்போதைய நிலைமையின் பிரகாரம் கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் 30ஆயிரத்துக்கும் அதிக கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. 

இருந்தபோதும் மாநகர சபை அதிகார பிரதேசத்தில் தொற்றாளர்களை கண்டு பிடிப்பதற்காக மாநகர சபையின் சுகாதார பிரிவினர் நாளாந்தம் எழுந்தமானமாக பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09