வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை எங்கு அமைப்­பது என்­பது குறித்து வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுடன் இணைந்து உட­ன­டி­யாக முடி­வெ­டுக்­கு மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பணித்­துள்ளார்.

வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை எங்கு அமைப்­பது என்­பது தொடர்பில் காணப்­படும் பிரச்­சி­னைகள் குறித்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்­தொ­டரில் நீண்­ட­நேரம் ஆரா­யப்­பட்­டி­ருந்­தது.

இச்­ச­ம­யத்­தி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு பணித்­துள்ளார். குறித்த கூட்­டத்­தின்­போது வடக்கு மாகா­ணத்­திற்­கான பொரு­ள­தார மத்­திய நிலை­யத்தை நிர்­மா­ணிப்­பதில் எவ்­வா­றான பிரச்­ச­னைகள் உள்­ளன என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேள்­வி­யெ­ழுப்­பினார்.

அத­னைத்­தொ­டர்ந்து அமைச்­ச­ர­வையில் குறித்த விடயம் தொடர்பில் காணப்­படும் நிலை­மைகள் அமைச்­சர்கள் சிலரால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டன. அவற்றை அவ­தா­னித்த பின்னர் கருத்து வௌியிட்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கஇ வவு­னியா மாட்­டத்தின் நகர்ப்­ப­கு­தி­யிலோ அல்­லது ஓமந்­தை­யிலோ அல்­லது மாங்­கு­ளத்­திலோ இந்த பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை அமைக்­க­வேண்­டி­யுள்­ளது.

ஒரு­வேளை இது தொடர்­பாக பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­மாயின் வவு­னியா மாவட்­டத்­திற்கும், மன்னார் மாவட்­டத்­திற்கும் வெவ்­வே­றாக இரண்டு பொரு­ளா­தார மத்­திய நிலை­யங்­களை அமைப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஆரா­யாலாம்.

எவ்­வா­றா­யினும் வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை எங்கு அமைப்­பது என்­பது குறித்து வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுடன் இணைந்து இறுதி முடி­வொன்றை உட­ன­டி­யாக எடுக்­க­வேண்டும். வட­மா­கா­ணத்­திற்­கான பிர­தி­நி­தி­க­ளு­டனும் கலந்­தா­லோ­சிக்க வேண்டும். இந்த விட­யத்­தினை தாம­த­மின்றி முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை கிரா­மிய பொரு­ளா­தார அமைச்சர் ஹரிசன் மேற்­கொள்­ள­வேண்டும் எனப் பணிப்­புரை விடுத்­துள்ளார். இத­னை­ய­டுத்து அமைச்சர் ஹரிசன் குறித்த விடயம் சம்­பந்­த­மாக தான் உரிய நட­வ­டிக்­கை­களை விரைந்து எடுப்­ப­தா­கவும் ஓரிரு நாட்­க­ளுக்குள் இப்­பி­ரச்­சி­னைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­ப­டு­மெ­னவும் குறிப்­பிட்டார்.

அத­னை­ய­டுத்து குறித்த விடயம் தொடர்பில் காணப்­படும் சர்ச்­சை­க­ளுக்கு முற்­றுப்­புள்­ளியை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அமைச்சர் ஹரிசன் தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ­க­ணே­ச­னிடம் பூர­ண­மான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்­துள்ளார்.

இவ்­வி­டயம் குறித்து அமைச்சர் மனோ­க­ணேசன் கூறு­கையில், வடக்கு மாகாண பொரு­ளா­தார மத்­திய நிலைய பிரச்­ச­னை­க­ளுக்கு முற்­றுப்­புள்­ளியை வைப்­ப­தற்­காக தன்­னி­டத்தில் அமைச்சர் ஹரின் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­மாறு கோரி­ய­தற்கு இணங்க தான் வட­மா­காண முத­ல­மைச்­சரை தொடர்பு கொள்­வ­தற்கு எடுத்த முயற்­சிகள் பல­ன­ளிக்­க­வில்­லை­யென்றும் அத­னை­ய­டுத்து கைத்­தொழில் மற்றும் வணி­கத்­துறை அமைச்சர் ரிஸாட் பதி­யூர்­தீ­னுடன் இவ்­வி­டயம் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும் குறிப்­பிட்டார்.

மேலும் அமைச்சர் ரிஸாட் பதி­யூர்தீன் வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை கூறு­போட்டு மன்­னா­ரிலும் வவு­னி­யா­விலும் அமைத்து அதனை இன­ரீ­தி­யாக வேறாக்­கு­வ­தற்கு தான் விரும்­ப­வில்­லை­யென்றும் இவ்­வி­ட­யத்­திற்கு உரிய தரப்­புக்­க­ளுடன் ஆராய்ந்து முற்­றுப்­புள்ளி வைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்­பதில் தானும் ஏக­க­ருத்­தையே கொண்­டி­ருப்­ப­தாக தெரி­வித்­த­தாக அமைச்சர் மனோ­க­ணேசன் குறிப்­பிட்டார்.

முன்­ன­தாக வட­மா­காண பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை ஓமந்­தையில் உள்ள அரச வீட்­டுத்­திட்டம் அமைந்­துள்ள பகு­திக்கு அண்­மையில் அமைப்­பது தொடர்பில் சர்ச்­சைகள் எழுந்­தி­ருந்த நிலையில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் ஆகி­யோரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனநாயக ரீதியில் முடிவொன்றை எட்டுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண பாராளுமன்ற, மாகாண பிரநிதிகளிடையே கருத்தக்கணிப்பை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்திருந்தாலும் குறித்த தீர்மானத்திற்கு அமைவாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஓமந்தை பகுதியிலேயே வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமையவேண்டும் என பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.