நாளை 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட உரை

Published By: Digital Desk 3

16 Nov, 2020 | 08:11 PM
image

(எம்.மனோசித்ரா)

2021 ஆம் நிதி ஆண்டிற்கான வரவு - செலவு திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய்க்கிழமை சமர்பிக்கவுள்ளார்.

பன்னாட்டு இராஜதந்திரிகள் மற்றும் நிதி அமைச்சின் முக்கிய அதிகாரிகளுக்கு உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் பூரண சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதற்கான கடப்பாடு குறித்து சகல தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

பிற்பகல் 1.40 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள பாராளுமன்ற அமர்வில் இடம்பெறவுள்ள அரச செலவீனங்களுக்கான நிதியை இலங்கைக்குள் அல்லது வெளிநாடுகளில் கடனாக பெற்றுக்கொள்வதற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தினை  2 ஆம் வாசிப்பிற்காக நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்பிக்கவுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமாணியில் வெளியிடப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 20 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்பித்திருந்தார்.

இந்நிலையில் 2021 வரவு - செலவு திட்ட உரையை நாளை செவ்வாய்க்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிகழ்த்தவுள்ளார்.

இதன் பின்னர் இலங்கை வரலாற்றின் 75 ஆவது வரவு - செலவுத்திட்டம் வெளியிடப்படும். அடுத்த ஆண்டிற்கான அரச செலவீனங்களுக்கு 2678 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்தல் மற்றும் 2900 பில்லியன்ரூபா கடன் பெறல் ஆகிய இரு விடயதாணங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்பிக்கப்படவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நாளை மறுதினம் 18 ஆம் திகதி ஆரம்பித்து 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அத்துடன் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த விவாத காலப்பகுதியில் பாராளுமன்ற அமர்வுகள் காலை 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 5.30 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27