கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளுக்கு இலவச மருத்துவ சேவை

Published By: Digital Desk 4

16 Nov, 2020 | 03:10 PM
image

(க.பிரசன்னா)

கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புக்களில் தொற்றா நோய்களின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி இலவச மருத்துவ நடமாடும் சேவையினை கொழும்பு மாநகர சபையின் நோய் நிவாரணத் திணைக்களம்; முன்னெடுத்துள்ளது.

10 கோடி குடும்பங்களுக்கு இலவச மருத்துவ வசதி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு  || Budget 2018: Free medical facilities for 10 crore families

இன்று திங்கட்கிழமை காலை 9 மணி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இவ்வாறு இலவச நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் , கொழும்பு நகர் பகுதிக்கு உட்பட்ட மக்கள் தங்களது மருத்துவ பிரச்சினைகளை தொலைபேசி மூலமாக அழைத்து 24 மணி நேரமும் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் சட்டத்தரணி ரோஹிணி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை கொழும்பு முகத்துவாரம் பகுதியிலுள்ள மெத்சத செவன தொடர்மாடி குடியிருப்பிலும் , நாளை செவ்வாய்கிழமை  முகத்துவாரம் மினிஜய செவன தொடர்மாடி குடியிருப்பிலும், நாளை மறுதினம் புதன்கிழமை முகத்துவாரம் ரண்மின செவன தொடர்மாடி குடியிருப்பிலும் இந்நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

19 ஆம் திகதி வியாழக்கிழமை புளுமெண்டால் பகுதியிலுள்ள சிறிசந்த உயனவிலும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாளிகாவத்தையிலுள்ள என்.எச்.எஸ். குடியிருப்பு தொகுதியிலும் 21 ஆம் திகதி சனிக்கிழமை முகத்துவாரத்திலுள்ள ரண்திய உயனவிலும் 23 ஆம் திகதி புளுமெண்டால் பகுதியிலுள்ள சிறிமுத்து உயனவிலும் 24 ஆம் திகதி தொட்டலங்கவிலுள்ள முவதொர உயனவிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

25 ஆம் திகதி முகத்துவாரத்திலுள்ள சிறிசந்த செவனவிலும் 26 ஆம் திகதி ரண்முத்து செவனவிலும் 27 ஆம் திகதி சத்ஹிரு செவனவிலும் 28 ஆம் திகதி லக்ஹிரு செவனவிலும் குறித்த இலவச நடமாடும் சேவைகள் காலை 9 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04