கல்­நேவ, கேகம்­பகா பிர­தே­சத்தைச் சேர்ந்த 57 வய­தான திரு­ம­ண­மா­காத பெண்ணை பாலியல் வல்­லு­வு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக சந்­தே­கத்தின் பேரில் 48 வய­தான நபர் ஒருவரை கல்­நேவ பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

குறித்த சந்­தேக நபர் அநு­ரா­த­புரம் களு­வ­ர­கஸ்­வெவ பிர­தே­சத்தைச் சேர்ந்தவர் எனவும் மூன்று தடவைகள் இந்தப் பெண்ணை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ உள்ளதாகவும் கடந்த 8 ஆம் திகதி குறித்த சந்­தேக நபரைக் கைது செய்­த­தாகவும் பொலிஸார் தெரி­வித்தனர்.