( மயூரன் )

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் மாணவி படுகொலை வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. 

அதன் போது குறித்த கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுடிருக்கும் 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதனை அடுத்து வழக்கினை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரையில் 12 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.