முல்லைத்தீவில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம் ! வாளுடன் இளைஞர் கைது

Published By: Digital Desk 4

15 Nov, 2020 | 07:10 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் வாளுடன் நடமாடிய குழுவினை சேர்ந்த ஒருவரை தேராவில் கிராம மக்கள் மடக்கி பிடித்து புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

சனி, ஞாயிறு நாட்களில் வாள்வெட்டு குழுவின் தொல்லை தாங்கமுடியாத நிலை காணப்படுவதாகவும் இரவு நேரங்களில் விதவை பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளும் வாள்வெட்டு குழு, வீட்டிற்கு வரவா இல்லை உன் மகளை கடத்துவோம்  அல்லது மகளுக்கு கை எடுப்போம்  என மிரட்டல் விடுவதாகவும் இவ்வாறு கதைப்பவர்களின் ஒலி வடிவங்கள் பதிவு செய்யப்பட்டு பொலிசாருக்கு கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று (15) காலை வாளுடன் வெட்ட வந்தவர்களை பிடித்த கிராம இளைஞர்கள் அதில் ஒருவரை பிடித்து வீட்டில் கட்டி வைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

தேராவில் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக வாள்களுடன் நடமாடுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

வாளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58