கருணா தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும் - வியாழேந்திரன்

Published By: Digital Desk 4

15 Nov, 2020 | 12:21 PM
image

மட்டக்களப்பு , கிழக்கு மாகாணத்தில் கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதால் இவர் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என. இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்

மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில்  முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரனின் பிறந்த நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை 15.11.2020ம் திகதி இடம்பெற்ற  இரத்ததான முகாமில் இரத்ததானம் வழங்கிய பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வினாயகமூர்த்தி முரளிதரன் என்பவரை நான் ஒரு அரசியல்வாதியாக கூட கணக்கெடுப்பதில்லை ஏன் ஒரு மனிதனாக கூட கணக்கெடுப்பதில்லை. அவர் ஒரு காமெடி பீஸ். ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்பது நாட்டின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டது. அந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் தற்போது 34 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது இன்னும் 2ம்,  3ம் கட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

கருணா அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டதனை ஊடகங்கள் வாயிலாக பார்த்தேன். மட்டக்களப்பில் இருக்கின்ற அமைச்சர் 20 ஆயிரம் ரூபாவை அந்த வேலைவாய்ப்பு விண்ணப்பங்களுக்கு வாங்கி வேலைவாய்ப்பை கொடுத்ததாக சொல்லியிருக்கின்றார்.

அந்த படிவத்தை பிரதேச செயலகங்களிலே பெற்று குறித்த வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்றவர்கள் வேலைவாய்ப்பினை பெற்றிருக்கின்றார்கள் இது இந்த கருணாவுக்கு ஒரு வகை வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு.

மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின் பெயரை உச்சரித்து அவர் பிரபலமாக வேண்டும் என நினைப்பவர்தான் கருணா ஆகவே அவர் என்ன பேசினாலும் நான் அதை கணக்கெடுப்பதில்லை.

கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளது. இதனை அரசாங்கம் விசாரிக்க வேண்டும்.

அண்மையில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்கு 20 ஆயிரம் ரூபா ஒரு விண்ணப்பத்திற்கு நான் வாங்கியதாக கருணா நிருபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன். என இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31