தேசிய அளவிலான மகாவலி அபிவிருத்திச் சபை ஒருபோதும் மாகாண எல்லைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமான மாகாண சபையை தேசிய அளவிலான மகாவலி அபிவிருத்திச் சபை போன்ற நிறுவனங்கள் கண்டுக் கொள்வதில்லை என்று வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 

குருநகர் வீதி அபிவிருத்திச் சபையின் மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற வடமத்திய மாகாண சபையின் கீழான விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.