நாடு திரும்பிய தூதரக அதிகாரிகள் உட்பட 128 இலங்கையர்கள்

Published By: Vishnu

15 Nov, 2020 | 08:32 AM
image

சீனா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து இலங்கை தூதரக அதிகாரிகள் உட்பட மொத்தம் 128 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி சீனாவின் ஷாங்காயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -867 என்ற விமானத்தில் ஐந்து இலங்கையர்கள் நேற்று மாலை 6.35 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தில் 59 இலங்கையர்கள் நேற்றிரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அத்துடன் கடடார், தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கியூஆர் -668 என்ற விமானத்தில் 39 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை இலங்கை தூதரக அதிகாரிகளும் துபாயிலிருந்து எமிரேட்ஸிலிருந்தும், கட்டாரிலிருந்தும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இது தவிர துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -226 என்ற விமானத்தில் 25 இலங்கையர்களும் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் கொழும்பில் அமைந்துள்ள நவலோக மற்றும் லங்கா தனியார் வைத்தியசாலைகளின் ஊழியர்களால் பி.சி.ஆர்.சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக நீர்கொழும்பு பகுதியில் அமைந்துள்ள பல சுற்றலா ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், தூதரக அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12