யாழ். இறைச்சிக்கடையில் கத்தி குத்து! ஒருவர் படுகாயம்

14 Nov, 2020 | 11:21 PM
image

யாழ்ப்பாணத்தில் தீபாவளி நாளில் மாட்டிறைச்சிக் கடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கலவரமானதில் இறைச்சி வாங்கச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இறைச்சிக் கடை உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள இறைச்சிக் கடையில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் கோப்பாயைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே படுகாயம் அடைந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

இறைச்சி வாங்கச் சென்ற குறித்த நபர், இறைச்சி பசு மாடு போல் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த நபருக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

 கோபமடைந்த உரிமையாளர் குறித்த நபரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கான நபர் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இறைச்சிக்கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இறைச்சி வாங்க வந்தவர் மதுபோதையில் தன்னை தாக்கியதாகவும் அதனால் தான் கத்தியால் குத்தியதாகவும் இறைச்சிக்கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தையடுத்து மாட்டிறைச்சிக் கடைக்கு சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32