சட்டவிரோத கடற்றொழிலால் முல்லைத்தீவு மீனவர்கள் பாதிப்பு - ரவிகரன் ஆதங்கம்

Published By: Gayathri

14 Nov, 2020 | 05:02 PM
image

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் மற்றும், இந்திய மீனவர்களினாலும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

எனவே, கடற்றொழில் அமைச்சர் தான் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுளை ஊக்குவிக்கின்றாரா ? என்ற கேள்வி எழுகின்றது எனவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில், வடமாகாண ரீதியாக நிபந்தனைகளுடன் கூடிய அட்டைத் தொழிலுக்கு அனுமதி வழங்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை தென்னிலங்கை மீனவர்கள் மேற்கொண்டு வருவதாலும், இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல், வெடிவைத்து மீன் பிடித்தல் போன்ற தென்னிலங்கை மீனவர்களின் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், சம்மேளனம் மற்றும் மீனவ மக்கள் அனைவரும் திரண்டு பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசு கூடிய கவனம் எடுத்திருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்துமாறு மீனவர்கள் அரசிடம் கோரியிருந்த நிலையில், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்களே தவிர, கடற்றொழில் அமைச்சோ, அல்லது கடற்றொழில் திணைக்களமோ சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

எமது மீனவர்கள் எமது கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது என்றுதான் கேட்கின்றனர்.

தாம் சிறுதொழில்களாக, குறிப்பிட்டளவு தொழில்களை இலங்கை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய மீன் பிடிச் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிலையில், சட்டவிரோதிகளாக தென்னிலங்கை மீனவர்களும், இழுவை மடிகளைப் பயன்படுத்தி இந்திய இழுவைப் படகுகளும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதனால் தாம் முற்று முழுதாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

தற்போது கார்த்திகை, மார்கழி, தை, மாசி போன்ற மாதங்களில் குறிப்பிட்டளவு நாட்களுக்குள் மாத்திரம் இறால் தொழில் முல்லைத்தீவில் அமோகமாக இடம்பெறும். 

இந் நிலையில், தற்போது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்களில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் எமது மீனவர்களின் இறால் தொழிலும் கேள்விக்குறியாக்கப்படுகின்றது.

எனவே, இத்தகைய செயற்பாடுகளைத் தடுக்க வேண்டியது யார் ? இலங்கை அரசின் உரிய திணைக்களங்கள் மற்றும் உரிய அமைச்சும் அதோடு சேர்ந்து இவர்களுடைய அறிவித்தலுக்கேற்ப கடற்படையினரும் இணைந்துதான் இச் சட்டவிரோத செயற்பாடுகளையும் அத்துமீறல்களையும் தடுக்கவேண்டும்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்காமல், அரசு முல்லைத்தீவு மீனவர்களை பட்டினிச்சாவினுள் தள்ளப்போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

ஒரு தமிழ் அமைச்சர் கடற்றொழில் அமைச்சராக இருந்துகொண்டு இந்த சட்ட விரோத தொழில் நடவடிக்கைகளை அவர் ஊக்குவிக்கின்றாரா என்றுதான் கேள்வி எழுப்பவேண்டியுள்ளது.

ஏனெனில், வடமாகாண ரீதியாக அட்டைத் தொழிலுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, நிபந்தனைகளுடன் அட்டைத் தொழில் செய்ய அனுமதிக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சருடைய அறிக்கைகளை பார்க்கமுடிகின்றது. 

நிபந்தனைகளுடன் அட்டைத் தொழிலுக்கு அனுமதி வழங்கினாலும் பல்வேறு சட்டவிரோத தொழில்கள் கடலில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. 

இவ்வாறான அனுமதிகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டால் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம் மற்றும் சமேளனம் உள்ளடங்கலாக மீனவர்களுடன் இணைந்து பாரிய போராட்டத்தினை மேற்கொள்வோம்.

மேலும், உரியவர்கள் இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31