வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் 

14 Nov, 2020 | 10:11 AM
image

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் இன்று தீபாவளி பண்டிகையை மிகவும் எளிமையாகவும் அமைதியாகவும் தத்தமது வீடுகளில் கொண்டாடுகின்றனர். தீபாவளி பண்டிகையானது வெற்றி விழாவாகவே கொண்டாடப்படுகின்றது. அதாவது தேவர்களுக்கு சதா கொடுமை செய்து வந்த நரகாசுரனை வதம் செய்த நாள் தீபாவளி என்பது ஐதீகம்.

உலக இந்துக்களால் நரகாசூரனை வதம் செய்த நாள் தீபாவாளியாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி நாளில் இனிப்பு, புத்தாடைகள், அன்புக்குரியவர்களை வாழ்த்துவது என அனைவரும் மகிழ்ந்திருப்பார்கள். இந்த நல்ல நாளில் செல்வ செழிப்போடு இருக்க, வீடுகளை சுத்தம் செய்து, அலங்கரிப்பது வழக்கத்தில் உள்ளது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கொண்டாட்டங்கள் குறைந்துவிடும் என்றாலும், தங்கள் அன்புக்குரியவர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் வாழ்த்துவதை யாரும் தவறவிடக்கூடாது.

அந்தவகையில் உலகையே அச்சுறுத்தி இலட்சக்கணக்கான மரணங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமான கொரோனா எனப்படும் இந்தக் கொடிய வைரஸை உலகில் இருந்தும் ஒழித்துக்கட்ட நாம் அனைவருமே திட சங்கற்பம் பூண வேண்டும்.  அதற்கு ஒரே வழி நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதும் பிறருக்கு அது பரவாது கவனமாக இருப்பதுமேயாகும்.

முன்னொருபோதும் இல்லாத வகையில் இந்த தீபாவளியை தமிழ் மக்கள் கொண்டாட முடியாத நிலையில் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் முற்றுமுழுதாக ஒழிக்கப்படும் நாளே உண்மையான வெற்றித் திருநாளாக அனைவருக்கும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.  

 சுகாதார நெறிமுறைகளை பேணுமாறு ஏனையோருக்கும் அறிவுரை வழங்குவோம்.

அடுத்த தீபாவளியையேனும் நாம் உற்றார், உறவினர்களுடன் அன்பாகவும் இன்பமாகவும் வெற்றித் திருநாளாக கொண்டாட இன்றே இந்த கொடிய அரக்கனை ஒழித்துக்கட்ட திடசங்கற்பம் பூணுவோம்.

தீபாவளி பண்டிகை தீமைக்கு எதிராக போராடவும், நன்மையின் பாதையை பின்பற்றவும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த நாள் உங்கள் வாழ்வை அமைதியுறச் செய்து, மகிழ்ச்சி மற்றும் செல்வத்துடன் ஒளிரச் செய்யட்டும். அந்தவகையில் வீரகேசரி இணையத்தளம் தனது இணையவாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

வீரகேரி இணையத்தள வாசகர்களுக்கு மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09