ட்ரோன் நடவடிக்கையின் பிரகாரம் 24 மணி நேரத்தில் 22 பேர் கைது! பிரதிப் பொலிஸ் மா அதிபர்

13 Nov, 2020 | 09:00 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் முடக்கப்பட்டுள்ள கொழும்பு வடக்கு, மத்திய கொழும்பு, மற்றும் கம்பஹா மாவட்டத்தில் சில பொலிஸ் பிரிவுகள்  ட்ரோன் கமரா கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் நிலையில்,  அந் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று மாலையும், இன்று மாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதியிலும் இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இடம்பெறும்  நடமாட்டங்களை கண்காணிக்க விமானப்படையின் உதவியுடன் ட்ரோனர்  கெமராக்கள்  பயன்படுத்தபப்டுகின்றன. அதன்படி,  விமானப்படையின் ட்ரோனர் கமராக்கள் மூலம் கண்கானிக்கபப்டும் பிரதேசத்தில்,   தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறிய நடமாட்டங்கள் உள்ளிட்ட  விடயங்கள் தொடர்பில் கிடைக்கப் பெறும் தகவல்களை மையப்படுத்தி, அப்பிரதேசம் சுற்றிவளைக்கப்படுகிறது. தனிமைபப்டுத்தல் விதிமுறைகளை மீறுவோரை இதன்போது   பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் பொலிசார் இணைந்த சிறப்புக் குழுக்கள் கைது செய்கின்றன.

  இந் நடவடிக்கைகளுக்காக விமானப்படையின் 3 ட்ரோனர் படைப் பிரிவு குழுக்களும், பெல் 212 ஹெலிகொப்டர் ஒன்றும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில் நேற்று நடாத்திய கண்காணிப்பின் பின்னர் 15 பேர் முகத்துவாரம் - மட்டக்குளி பகுதியிலும்  இன்றைய கண்காணிப்பின் பின்னர்  முகத்துவாரம், கல்கிசை பகுதிகளில் 7 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்து வரும் நாட்களிலும் இந்த கண்காணிப்பு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

 எவ்வாறாயினும் இந்த ட்ரோன் கண்காணிப்பை தொடர்ந்து தற்போது, பொது மக்கள்  முடக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை பெரும்பாலும் பேணி நடப்பதை காணக் கூடியதாக உள்ளதாகவும் அது மகிழ்ச்சியளிக்கும்  விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17