தோட்டப்பகுதிகளிலும் கொவிட் கொத்தணிகள் ஏற்படலாம் - திகாம்பரம்

13 Nov, 2020 | 05:53 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

கொழும்பு, கம்பஹா போன்று தோட்ட பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவும் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. அதனால் மக்களை பாதுகாக்க தேவையான சுகாதார ஏற்பாடுகளை இந்த பகுதிகளில்  அரசாங்கம் விரைவாக மேற்கொள்ளவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ப. திகாம்பரம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற கொவிட் காரணமாக நாட்டின் நிகழ்கால நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னெச்சரிக்கை விடுத்தபோதும் அரசாங்கம் சிறிதளவும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதன் விளைவையே நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ளது. நாம் முன்னெச்சரிக்கை செய்தபோதே விமான நிலையத்தை மூடியிருந்தால் பரவலைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

எனினும் அரசாங்கம் தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டதாலும் அசமந்தப் போக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தமையாலும் தற்பொழுது 25 மாவட்டங்களிலும் வைரஸ் பரவியுள்ளது.

கொழும்பு, கம்பஹா போன்று கொரோனா வேகமாகப் பரவும் அச்சுறுத்தல் காணப்படும் பகுதியாக பெருந்தோட்டப் பகுதிகள் காணப்படுகின்றன. இங்குள்ள மக்கள் லயன்களில் நெருக்கமாக வாழ்கின்றனர். இங்கு கொத்தணியாக தொற்றுக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதிலிருந்து அம்மக்களைப் பாதுகாக்க பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் மக்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான மையங்களை அமைப்பதற்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய வசதிகளுடன் வைத்தியசாலைகளை தயார்ப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04