அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் இற்கு வடக்கு பகுதியில் ஏற்பட்ட  காட்டுத்தீயானது 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்குப் பரவியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மணிக்கு 65 கிலோமீற்றர் வேகத்துடன் பரவும் குறித்த காட்டுத்தீயால் 20 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

நேற்று முன் தினம் பிற்பகலில் சான்டா கிளாரிடா பகுதியில்  தீ பரவ ஆரம்பித்துள்ளது. 

நூற்றுக் கணக்கான தீயணைப்பாளர்கள் 41 பாகை டிகிரி செல்சியஸ்ஸிற்கும் அதிகமான வெப்பநிலையில், தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.இவர்களுக்கு உதவியாக ஹெலிகாப்டர்களும், விமானங்களும் தீயணைப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசுவதினால் தீயினை கட்டுபாட்டிற்குள் கொண்டுவர முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.