அமெரிக்க தேர்தல் விவகாரம்: 'சதிமுயற்சியா' அல்லது போதுமா ? - மங்கள 

Published By: Digital Desk 4

13 Nov, 2020 | 04:05 PM
image

(நா.தனுஜா)

அமெரிக்காவில் தற்போது டொனால்ட் ட்ரம்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் ஒரு 'சதிமுயற்சியை' போன்று இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஆசியாவில் அல்லது ஆபிரிக்காவில் தேர்தலில் தோல்வியுற்ற தலைவர் ஒருவர் அதனை ஏற்க மறுத்திருந்தால் ஜனநாயக நாடுகளின் மத்தியிலிருந்து பாரிய கண்டனங்கள் வெளிப்பட்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஆசியாவிலோ அல்லது ஆபிரிக்காவிலோ தேர்தலின் பின்னர் ஒரு தலைவர் தனது தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்பாராக இருந்தால், அதற்கு எதிராக ஜனநாயக நாடுகளின் மத்தியிலிருந்து பாரிய கண்டனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும். 

அந்தவகையில் தற்போது அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கும் விடயங்களை ஒரு 'சதிமுயற்சி' என்றே வர்ணிக்க வேண்டியிருக்கிறது. எனவே இப்போது அமெரிக்காவின் நட்பு நாடுகள் 'போதும்' (Enough is enough) என்பதை டொனால்ட் ட்ரம்பிற்கு வலுவாகவும் சத்தமாகவும் எடுத்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04