மியன்மார் தேர்தலில் பெரும்பான்மையை வென்ற ஆங் சான் சூகியின் கட்சி

Published By: Vishnu

13 Nov, 2020 | 01:45 PM
image

மியன்மாரின் தற்போதைய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஆளும் தேசிய  ஜனநாயக லீக் கட்சி (NLD) பாராளுமன்றில் போதுமான இடங்களை பெற்றுள்ளது.

மியன்மாரில் அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்றில் 322 இடங்களை பெற வேண்டும். எனினும் ஆங் சான் சூகியின் ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சி தற்போது 346 இடங்களை பெற்றுள்ளது.

ஆரம்ப முடிவுகளின் அடிப்படையில் ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி வெற்றியைக் கோரிய சில நாட்களுக்குப் பிறகு இந்த முடிவு வெளிவந்துள்ளது.

எனும் இராணுவ ஆதரவுடைய எதிர்க்கட்சி தேர்தலை மீண்டும் நடத்தக் கோரியுள்ளது.

தற்போதைய அறிவிப்புக்கு முன்னதாக, இந்தியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆங் சான் சூகியின் வெற்றிக் வாழ்த்துக்களை தெரிவித்தும் உள்ளன.

சுமார் 54 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடத்தநது.

இது 50 ஆண்டுகால இராணுவ ஆட்சி 2011 ஆம் ஆண்டில் முடிவடைந்த பின்னர் இடம்பெறும் இரண்டாவது பொதுத் தேர்தலாகும்.

90 க்கும் மேற்பட்ட கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தம் 5,643 வேட்பாளர்கள் 1,171 தேசிய, மாநில மற்றும் பிராந்திய இடங்களுக்கு போட்டியிட்டனர்.

இந் நிலையில் தற்போது மியான்மரின் அரச ஆலோசகர் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி முன்னிலையில் உள்ளது.

எவ்வாறெனினும் தேர்தலில் மில்லியன் கணக்கான வாக்காளர்களை வாக்களிக்காததால் தேர்தல்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

காரணம் 2015 தேர்தலுக்கு முன்னதாக மியன்மாரில் ரோஹிங்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டமையினால் ராகைன், ஷான் மற்றும் கச்சின் உள்ளிட்ட மாநிலங்களின் பெரிய பகுதிகளிலும் வாக்களிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 740,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் மியான்மரை விட்டு, அண்டை நாடான பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் ரோஹிங்கிய முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை வாக்களிப்பு நடவடிக்கையில் உள்ளீர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கடந்த திங்களன்று மியன்மாறுக்கு அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08