யாழ் ஆலயங்களில் தீபாவளி பூசை வழிபாடுகளுக்கு செல்வோரின் கவனத்திற்கு !

Published By: Digital Desk 4

13 Nov, 2020 | 01:59 PM
image

யாழ் மாவட்ட ஆலயங்களில் தீபாவளி பூசை வழிபாடுகளில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூடாதீர்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு மலையகத்தில் ஒருசிலரின் பங்குபற்றலுடன் விசேட பூசை! |  Athavan News

இந்துக்களின் பண்டிகையாகிய தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் ஆலயங்களில் பூஜை வழிபாடுகளும் இடம்பெறும்.

அத்தோடு தற்போது இந்து கோவில்களில் விரத பூசைகளும்  இடம்பெற்று வருவதனால் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.

ஏற்கனவே இந்து கலாச்சார திணைக்களத்தினரால் ஆலயங்களுக்குள் 5  பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாது ஆலயங்களுக்கு செல்வதையும் தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டி இறைவனைப் பிரார்த்திக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினரால் ஏற்கனவே ஆலயங்களுக்குரிய சுகாதார விதிமுறைகள் தொடர்பான  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் ஆலயங்களுக்கு  சென்று ஒன்றுகூடுவதை தவிர்த்து வீடுகளிலிருந்து அமைதியான முறையில் இவ்வருட  தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04