கிளிநொச்சிக்கான குடி நீர் விநியோகத்தடைக்கு இது தான் காரணம்

Published By: Digital Desk 4

13 Nov, 2020 | 01:33 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் அடிக்கடி முன்னறிவித்தலின்றி குடிநீர் விநியோகம் தடைப்படுவதனால் முற்றுமுழுதாக குழாய்வழி குடிநீரை நம்பியிருக்கின்ற தாம் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போதும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் மலசல கூடத்திற்கு கூட செல்ல முடியாது அவதிப்படுவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

முன்னறிவித்தல் இன்றி இவ்வாறு  நீர் விநியோகம் தடைப்படுவது தங்களை பெரும் நெரு்ககடிக்குள் தள்ளிவிடுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிளிநொச்சி நகரையும், நகரை அண்டிய பகுதிகளுக்கும்  நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இந்த பிரதேசங்களை சேர்ந்த பொது மக்கள் தற்போது குழாய் வழி நீரையே முற்றுமுழுதாக நம்பி வாழத் தொடங்கிவிட்டார்கள். 

இந்த நிலையில்  அடிக்கடி முன்னறிவித்தல் இன்றி நீர் விநியோகம் தடைப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நாட்களில் கூட நீர் விநியோகம் தடைப்பட்டிருப்பது  அதனை நம்பியுள்ள மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

எனவே இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரை தொடர்பு கொண்டு வினவிய போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு சுத்திகரித்து குடி நீரை வழங்குகின்ற சுத்திகரிப்பு நிலையம் பழைய தொழிநுட்பத்தில் இயங்கும் சுத்திகரிப்பு நிலையமாகும், 

இதில் நாள் ஒன்றுக்கு 500 மீற்றர் கீயூப்  நீரையே சுத்திகரிக்க முடியும் ஆனால் கிளிநெச்சிக்கு  நாள் ஒன்றுக்கு 2000 மீற்றர் கீயூப் நீர் தேவைப்படுகிறது. ஆதாவது தேவையான நீரின் அளவில் 25 வீதத்தை மட்டுமே சுத்திகரிக்க  முடிகிறது. 

அத்தோடு  கிளிநொச்சி குளத்திற்கு நீர் வருகின்ற வாய்க்காலில் உருவாக்கின்ற அல்கா எனும் ஒரு வகை நுண்ணுயிர் அதிகம்  உருவானதன் காரணமாகவும் மற்றும் மழைகாரணமாக அதிகளவு மண் மற்றும் கலங்கல் நீர் குளத்திற்கு வந்தமையாலும்  பழமையான தொழிநுட்பத்தில் இயங்கிய சுத்திகரிப்பு நிலையம் இயங்காது போய்விட்டது.

இதனாலேயே அனைத்து பிரதேசங்களுக்கும் ஒரே தடவையில் சீராக நீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியாதுள்ளது. எனத் தெரிவித் அவர்கள் வருடத்தில் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு  இவ்வாறான தடை ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09