369 புதிய தொற்றாளர்கள் ! தினமும் பதிவாகும் கொரோனா மரணங்கள் : கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிப்பு!

Published By: Jayanthy

12 Nov, 2020 | 10:15 PM
image

• இன்று 369 புதிய தொற்றாளர்கள்

• சீன, கொழும்பு துறைமுகங்கள் , ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும் தொற்றாளர்கள்

• கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிப்பு

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொரோனா பரவல் ஆரம்பித்த போது ஒவ்வொரு நாட்களும் குறைந்தளவிலான தொற்றாளர்கள் பதிவாகியதைப் போன்று தற்போது மரணங்கள் பதிவாக ஆரம்பித்துள்ளன. குறைந்தளவிலான இளம் வயதினரும் , மத்திய வயதினரும் வயதானோரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் ஏதேனுமொரு நோயால் அல்லது நாட்பட்ட தொற்றா நோயால் பாதிக்கப்பட்டவர்களாகவுள்ளனர். எனவே தற்போது கொரோனாவிலிருந்து முதியோரையும் நோய் வாய்ப்பட்டோரை பாதுகாப்பதற்கு நிகராக தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாப்பதும் தேசிய பொறுப்பாகியுள்ளதாக சுகாதார தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறிருப்பினும் இன்றும் இலங்கையில் இரு கொரோனா மரணங்கள் பதிவாகின. உயிரிழந்தவர்களில் ஒருவர் நாட்பட்ட நுரையீரல் நோயாலும் , மற்றைய நபர் நியுமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை இன்று இரவு 10  மணிவரையான காலப்பகுதியில் 369  புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 15 719 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 10 653 பேர் குணமடைந்துள்ளதோடு , 5018 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று பதிவான மரணங்கள்

கொவிட் 19 தொற்றாளர்களான இனங்காணப்பட்டு முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று வியாழக்கிழமை வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளனளர்.

இம் மரணங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கொழும்பு 12 ஐ சேர்ந்த 54 வயதுடைய ஆணொருவர்  உயிரிழந்துள்ளார். நாட்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கொவிட் தாக்கமும் ஏற்பட்டமை உயிரிழப்பிற்கான காரணமாகும்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நியூமோனியா மற்றும் இரண்டாம் நிலை பற்றிறீயா தொற்றுக்கு உள்ளானமை இவரது மரணத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வடைந்துள்ளது.

13 மாவட்டங்களில் 625 தொற்றாளர்கள்

புதனன்று 13 மாவட்டங்களிலிருந்தும் 625 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் 264, கம்பஹாவில் 136, கொழும்பு மாநகர சபையில் 9, களுத்துறையில் 18, புத்தளத்தில் 4, இரத்தினபுரியில் 1, கண்டியில் 25, காலியில் 3, மாத்தறையில் 05, அம்பாந்தோட்டையில் 2, அம்பாறையில் 1, நுவரெலியாவில் 1, பதுளையில் 1, யாழ்ப்பாணத்தில் 1 என 13 மாவட்டங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவை தவிர சீன துறைமுகத்தில் 47, கொழும்பு துறைமுகத்தில் 31, ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் 5, போகம்பரை சிறைச்சாலையில் 6, பொலிஸ் உத்தியோகத்தர்கள் 47, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 10 என வெவ்வேறு பகுதிகளிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிப்பு

கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து அங்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை 5 மடங்காக அதிகரிக்கவுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்தியர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கொள்ளுபிட்டி, பொரளை, கோட்டை உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகளிலும் தினமும் இனங்காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17