மைத்திரி, ரணில் ஆகியோரின் கூட்டு அரசாங்கம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, ஆட்சியை கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தில் இருந்தபோதிலும் நாம் எவருக்கும் அஞ்சபோவதில்லை. எனவே திட்டமிட்டப்படி எதிர்ப்பு பேரணியை நடத்தியே தீருவோம் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன திட்டவட்டமாக தெரிவித்தார்.

பொரள்ளையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.