கடன்களை மீளச்செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை : சுசில் பிரேமஜயந்த 

Published By: R. Kalaichelvan

12 Nov, 2020 | 05:20 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வேறுபாடு 9 பில்லியன் டொலர்களாகும், இந்த ஆண்டில்  4.2 பில்லியன் டொலர் கடன்களை மீளச்செலுத்த வேண்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று , 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு வழக்கமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முழுமையான வரவுசெலவுத்திட்டம் அல்ல. முன்னைய அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது என்பதே உண்மையாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் வரவுசெலவுத்திட்டத்தைக் கொண்டுவர முடியவில்லை. இதற்கு கொரோனா நோய்த்தொற்றும் காரணமாகவிருந்தது.

அரசியலமைப்பின் 150 (3) சரத்தின் கீழ் ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோப்பு ஆவணங்களில் கடந்தகால செலவுகள் யாவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் செலுத்தப்படாதிருந்த கொடுப்பனவுகள் பல நிலுவையில் இருந்தன. அதற்கெல்லாம் அவர்கள் பணம் செலுத்தவேண்டியிருந்தபோதும் அவை அனைத்தும் தற்பொழுது எமது பொறுப்பாக மாறியுள்ளது.

இன்று நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வேறுபாடு 9 பில்லியன் டொலர்களாகும். 2020ஆம் ஆண்டிலிருந்து  4.2 பில்லியன் டொலர் கடன்களை மீளச்செலுத்த வேண்டியுள்ளது. தேயிலை, இறப்பர், தேங்காய் போன்ற ஏற்றுமதி பயிர்கள் மற்றும் ஆடைகள் போன்றவற்றிலிருந்து நாம் அந்நிய செலாவணியை ஈட்டுகின்றோம். வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து வரும் வருமானம் இன்று குறைந்துள்ளது.

இன்று இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரி அறவீடும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த செலவு 2718 பில்லியன் ரூபாய் 22 மில்லியன் ரூபாய். நாட்டின் வருமானம் அனைத்தும் சரிந்துவிட்டது நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் செழிப்பு பார்வை கொள்கை அறிக்கையின் கீழ் செயல்படுகிறது. பட்டதாரி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

உள்ளூர் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும். இழந்த அந்நிய செலாவணியை மீட்டெடுக்க நாம் பணியாற்ற வேண்டும். அதற்காக அவசர வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன்.

உள்ளூர் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும். இழந்த அந்நிய செலாவணியை மீட்டெடுக்க நாம் பணியாற்ற வேண்டும். அதற்காக அவசர வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04