வர்த்தகர்களுக்கு பொது சுகாதார பிரிவினரால் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

12 Nov, 2020 | 06:18 PM
image

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு அட்டன் டிக்கோயா நகரங்களுக்கு இன்று (12.11.2020) திகதி பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் வருகை தந்திருந்தனர்.

இவர்களில் அதிகமானவர்கள் சுகாதார பொறிமுறைக்கு அமைவாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பேணி வருகை தந்திருந்தனர்.

எனினும் ஒரு சிலர் முறையாக முகக்கவசம் அணியவில்லை அவர்கள் சுகாதார பிரிவினாரால் எச்சரிக்கப்பட்டனர்.

இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வர்த்தக நிலையங்களில் தொற்று நீக்கம் செய்த பின்னர் பதிவுகள் மேற்கொண்டு  கொள்வனவில் ஈடுபட வேண்டும் என வர்த்தகர்களுக்கு அட்டன் டிக்கோயா நகரசபையினால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாக பல வர்த்தகர்கள் அட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களினால் எச்சரிக்கப்பட்டனர்.

இதே வேளை அட்டன் நகருக்கு வரும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி அட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் பாலசந்திரனின் ஆலோசனைக்கமைய அட்டன் நகருக்கு வரும் பொது மக்கள் கொரோனா பாதுகாப்பு உடையணிந்த நபர்களால் உடல் வெப்பம் அளக்கப்பட்டு கைகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

அதிகமான மக்கள் கூடியிருந்த ஒரு சில வர்த்தக நிலையங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதுடன் வர்த்தகர்கள் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பேண வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04