டோக்கியோ ஒலிம்பிக் ; வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டியதில்லை - அமைப்பாளர்கள்

Published By: Vishnu

12 Nov, 2020 | 01:19 PM
image

2021 வரை ஒத்தி வைக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்காக டொக்கியோவுக்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் வீரர்களுக்கு ஜப்பானின் 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் விளையாட்டு வீரர்களும் குழுவினரும் ஜப்பானுக்கு வருகை தருவதற்கு முன்னர் 72 மணி நேரத்திற்குள் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும் வெளிநாட்டிலிருந்து வரும் பார்வையாளர்கள் குறித்த முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்று ஒலிம்பிக் அமைப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறெனினும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான சுகாதார ஆலோசனை விபரங்களை மேலும் தயாரிக்க வேண்டும் என டோக்கியோ 2020 தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளின் போது தொற்று தடுப்பு நடைமுறைகள் குறித்து டோக்கியோ பெருநகர அரசாங்கத்தின் அதிகாரிகள், தேசிய அரசு மற்றும் டோக்கியோ 2020 அமைப்பாளர்கள் இடையே நடந்த சந்திப்பின் பின்னர் உரையோற்றும்போதே முட்டோ இதனை கூறியுள்ளார்.

தொற்றுநோய்களின் நிலையைப் பொறுத்து அடுத்த ஆண்டு வெளிநாட்டு பார்வையாளர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகத் தலைவர் தோமஸ் பாக் அடுத்த வாரம் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு ஜப்பானுக்கு வருகை தரவுள்ளார். இதன்போது  ஒலிம்பிக் போட்டிகளின்போது கொரோனா வைரஸ் எதிர் நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடப்படும் என்றும் முட்டோ குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை 2021 ஜூலை 23 தொடக்கம் ஆகஸ்ட் 8 வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59