தொழில் புரிவதற்கான சிறந்த இடமாக 99X Technology மீண்டும் தெரிவு

Published By: Priyatharshan

26 Jul, 2016 | 11:49 AM
image

மக்கள் தேர்ந்தெடுக்கும் முதன்மையான கூட்டுநிறுவனமாக தொடர்ச்சியாக Great Place to work நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமையால் இலங்கையில் பணியாற்றிட சிறந்ததோர் நிறுவனமாக 99X Technology நிறுவனம் மீண்டும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் நான்காவது ஆண்டாகவும் தனது பெயரைப் பதித்த ஒரே ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக 99X Technology பெருமிதமடைகின்றது.

கடந்த ஆண்டைப் போலவே இந்நிறுவனமானது கௌரவிமிக்க இரு விருதுகளை சுவீகரித்துக்கொண்டதுடன் மேலும் இலங்கையின் 25 சிறந்த பணியிடங்கள் பட்டியலில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிய அளவிலான நிறுவனமாக சிறந்து விளங்குகின்றமைக்கான தங்க விருதினையும், “Excellence in Employee Voice” என்னும் விருதினையும் பெற்றுக்கொண்டுள்ளது.

செயற்பாடுகளின்போது கடைபிடித்த சிறந்த நடைமுறைககள் மற்றும் நிறுவன அங்கிகாரத்திலிருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்பு மற்றும் குறை தீர்த்தல் போன்றவற்றிற்கான விருதுகளையும் இந்நிறுவனம் சுவீகரித்துள்ளது. 

வேலைத் தளங்களில் ஊழியர்களை மையப்படுத்தி முன்னோடியான சேவையினை ஆற்றிவரும் இந்நிறுவனம் சிநேகபூர்வமான மற்றும் அணுகல் முகாமைத்துவத்திற்கான அங்கீகாரத்தையும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் 99X Technology நிறுவனம் முன்னேற்றத்தை தரக்கூடிய மற்றும் ஊழியர்கள் தம் படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த சூழலை பெற்றுத்தருவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மனோ சேகரம் அவர்கள் இந்த வர்த்தக நாமத்தைப் பற்றிக் கூறுகையில்,

“தொடர்ந்தும் இலங்கையின் மிகச் சிறந்த பணியிடங்களில் ஒன்றாக நாம் இருப்பதை எண்ணி மிகவும் பெருமையடைகின்றோம். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பிரிவுகளில் பாராட்டப்படுகின்றமை எமக்கு பெருமையளிக்கின்றது. 

இது எம் நடவடிக்கைகளை இன்னும் சிறப்பாக முன்னெடுக்க எமக்கு உத்வேகமளிக்கின்றது. எமது தேர்ச்சிபெற்ற மற்றும் கடுமையான உழைக்கும் எமது தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இன்றி இவையனைத்தும் சாத்தியமாகி இருக்காது.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

2015ம் ஆண்டில் 99X Technology நிறுவனமானது சிறந்த மேம்பாட்டு பயிற்சி (மக்கள் மேம்பாடு) மற்றும் பணியாளர் அங்கீகாரத்திற்கான சிறந்த பயிற்சி போன்ற பிரிவு ரீதியிலான விருதுகளை வென்றதுடன் நடுத்தர அளவிலான நிறுவனத்திற்கான தங்க விருதினையும் வென்றதுள்ளது. 

மேலும் 2015ம் ஆண்டு ஆசியாவின் 25 சிறிய மற்றும் நடுத்தர பணியிடங்கள் என்னும் வரிசையில் இலங்கையின் முதல் மற்றும் ஒரே ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக 48,000 ஊழியர்களை உள்ளடக்கிய 77 நிறுவனங்கள் இவ்வருடம் சிறந்த வேலை நிறுவன மதிப்பீட்டில் இடம்பிடித்திருந்தன. சிறந்த வேலை நிறுவன தெரிவானது இரண்டு கோணங்களில் நடைபெற்றது அவை ஊழியர்கள் முன்னோக்கு மற்றும் முகாமையாளர்கள் முன்னோக்கு என்பனவாகும்ரூபவ் இது ஓர் சிறந்த நிறுவன கலாச்சார மற்றும் சிறந்த நடைமுறையாக கருதப்படுகிறது.

நம்பகத்தன்மை மற்றும் தலைமைத்துவமே சிறந்ததொரு வேலைதளத்தை உருவாக்குவதற்கு மைல்கல்லாக அமைகிறது என 99X Technology நிறுவனம் நம்புகிறது. 

மேலும் அதுவே வேலை செய்வதற்கான இடம் என்பதிலிருந்து பணியாற்றுவதற்கான மிகச் சிறந்த இடம் என்னும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுக்க காரணமாகியுள்ளது. நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கைதான் இதன் அடித்தளம், இந்த அடித்தளத்தின் மேல்தான் பணியிடம் கட்டப்பட்டுள்ளது. 

இதுவே நிறுவனத்திற்குள்ளும் வெளியிலும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியிலும் வளம்மிக்க ஓர் நிலைக்கு தொழிலாளர்களை செழிப்பாக உயர்த்திட காரணமாகின்றது.

99X Technology நிறுவனமானது மென்பொருள் தயாரிப்பு பொறியியல் துறையில் விருது வென்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் ஐரோப்பிய பகுதியை முதன்மையாக் கொண்டு உலகம் முழுவதுமுள்ள சுயாதீன மென்பொருள் விற்பனையாளர்களுக்கு அதியுயர் மென்பொருள் தயாரிப்பு மேம்பாட்டு சேவைகளை வழங்கிவருகின்றது. 

இலங்கையை தலைமை அலுவலகமாக கொண்ட இந்நிறுனத்தின் அலுவலகங்கள் ஒஸ்லோ மற்றும் நோர்வேயிலும் உள்ளதுடன் 99X Technology நிறுவனமானது 150 மேற்பட்ட வணிக பொருட்களை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் தடம் பதித்துள்ள சிறந்த நிறுவனமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57