பாராளுமன்ற அமர்வை 10 மணித்தியாலங்கள் வரை நீடிக்க தீர்மானம்

Published By: Jayanthy

10 Nov, 2020 | 08:49 PM
image

2020 ஒதுக்கீட்டு சட்டமூலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் அன்றை தினம் பாராளுமன்றம் இரவு 8.00 மணி வரை நடைபெறுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவு குழு நேற்று (09) தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக காலை 10.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரையில்; ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் 2ஆம், 3ஆம் வாசிப்பு இடம்பெறவுள்ளது. இதனைதொடர்ந்து மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிவரையில் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.

அன்றை தினம் காலை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மொழி மூலமான கேள்விகள் இடம்பெறாது. அத்தோடு இரவு நேர உணவுக்காக சபை ஒத்தி வைக்கப்படும். 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட ஆவணத்தை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17 ஆம் திகதி சமர்பிக்கவுள்ளார்.

கொவிட் - 19 நெருக்கடியினால் வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதத்தை 11 நாட்களுக்கு வரையறுக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தின் போது ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இருப்பினும் எதிர்க்கட்சி இதற்காக முழுமையான காலம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதத்தை நடத்தும் நாட்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை. எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றத்தில் தெரிவு குழு கூட்டத்தை நடத்தி இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்வதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, விமல் வீரவம்ச, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியல்ல, ஜயந்த கருணாதிலக்க, அனுரகுமார திசாநாயக்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09