மன்னார் மாவட்டத்திற்குள் நுழைவோருக்கு முக்கிய அறிவிப்பு

Published By: Digital Desk 4

10 Nov, 2020 | 04:33 PM
image

நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக  வெளி மாவட்டத்தில் இருந்து மன்னார் மாவட்டத்துக்குள் வியாபார நோக்கத்துடன் உள் நுழையும் வியாபாரிகள் மற்றும் வியாபார வாகனங்கள் அனைத்தும் மன்னார் முருங்கன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதியில் தொற்று நீக்கிய பின்னர் ஒரு மாத கால எல்லைக்குள் பெறப்பட்ட பீ. சி .ஆர் பரிசோதனை அறிக்கையுடன் வரும் போது மாத்திரமே மன்னார் மாவட்டத்துக்குள் உள் நுழைய அனுமதி வழங்கப்பட்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் தொடர்பான அவசர மீளாய்வு கூட்டமானது மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்றது.

 மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தர்மராஜ் வினோதன்,  பிரதேச செயலாளர்கள் , திணைக்கள தலைவர்கள், முப்படை பிரதி நிதிகள் பலரது பங்கு பற்றுதலுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது .

குறித்த கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

அதே நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவை தொடர்பாகவும் அவற்றை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும்  அத்தியாவசிய பொருட்களுக்கான தேவைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அத்துடன் திருமண நிகழ்வுகள் வைபவங்கள் போன்ற மக்கள் ஒன்று கூடும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் மதுபானசாலைகள் மற்றும் அதிஸ்டலாப சீட்டுக்கள் விற்பனை செய்யும் இடங்களில் நடை முறைப்படுத்தப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

அதே நேரத்தில் இது வரையான காலப்பகுதியில் மன்னார் மாவட்டம் முழுவதும் 2405 பி. சீ .ஆர் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதில் 12 நேயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 அவர்களில் 10 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடதக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22