மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

Published By: R. Kalaichelvan

10 Nov, 2020 | 03:27 PM
image

பல வருடங்கள் பழமையான மா மரமொன்று முறிந்து விழுந்ததால் வீடொன்றும், பஸ்ஸொன்றும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா, ஹங்குராங்கெத்த - உடவத்த ஊடான கலவுட வீதியில் உடவத்த கல்லூரிக்கு அருகிலுள்ள நிலத்தில் இருந்த மரமொன்றே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.

இதனால் குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் சேதமடைந்துள்ளது.

அத்துடன், இம்மரத்தின் கிளையொன்று அருகில் இருந்த மற்றுமொரு மரம் மீது விழுந்ததில் அம்மரமும் சரிந்து விழுந்துள்ளதால் வீடொன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசி சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் குறித்த மரத்தை வெட்டி அகற்றுவதற்கு பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ள நிலையில் குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது. இந்நிலையில், அதனை வெட்டியகற்றுவதற்கு தாமதம் ஏற்பட்டதாலேயே அவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஹங்குராங்கெத்த பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.

இன்றைய தினத்துக்குள் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பும் அதுவரையில் மாற்று வழியை பயன்படுத்துமாறும் அவர் கோரினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02