ஏழு புதிய தூதுவர்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

Published By: Vishnu

10 Nov, 2020 | 06:58 AM
image

வெளிநாட்டுத் தூதுவர்களாகச் சேவையாற்ற இலங்கை அரசாங்கத்தினால் பெயரிடப்பட்ட ஏழு புதிய தூதுவர்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் உயர் பதவிகள் பற்றிய குழு நேற்று கூடியது.

இதன்போதே ஏழு புதிய தூதுவர்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, அஹமட்.ஏ.ஜவாட் சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், அருனி ரணராஜா நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், தர்ஷன பெரேரா சுவீடனுக்கான இலங்கைத் தூதுவராகவும், எம்.கே.பத்மநாதன் எகிப்துக்கான இலங்கைத் தூதுவராகவும் நியமிப்பதற்கான அனுமதி இதன்போது வழங்கப்பட்டது.

மேலும், எஸ்.டி.கே.சேமசிங்ஹ போலாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், சி.ஈ.சமிந்த.ஐ.கொலன்னே தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும் நியமிப்பதற்கான அனுமதியும் இதன்போது வழங்கப்பட்டது.

சமல் ராஜபஷ, நிமல் சிறிபால டி. சில்வா, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரமேஷ் பதிரன, சுதர்ஷனி பர்னாந்துபுல்லே, விதுர விக்ரமநாயக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56