காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் ஜோ பைடனுக்கு கடிதம்

Published By: Digital Desk 4

09 Nov, 2020 | 09:15 PM
image

நன்கு அனுபவம் வாய்ந்த, பரிவுணர்வுள்ள ஒருவர் சுதந்திர உலகின் தலைவராக இருப்பதற்காக நாங்கள் காத்திருந்தோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்திருந்தனர். 

மேலும் அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் பெற்ற உற்சாகமான வெற்றியை வாழ்த்துவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறோம்.

வவுனியாவைச் சேர்ந்த தமிழ் தாய்மார்கள் நாங்கள். இலங்கை ஆட்சியின் கொடுமையால் காணாமல் ஆக்கப்பட்ட  எங்கள் குழந்தைகளை தேடுகிறோம்.

நன்கு அனுபவம் வாய்ந்த, பரிவுணர்வுள்ள ஒருவர் சுதந்திர உலகின் தலைவராக இருப்பதற்காக நாங்கள் காத்திருந்தோம் .

இறுதியாக அமெரிக்காவும் உலகின் பிற பகுதிகளும் உங்களை எங்கள் தலைவராகப் பெறுகின்றன.

காணாமல் ஆக்கப்பட்ட  தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் நாங்கள், உங்கள் கவனத்தையும் எங்கள் கடினமான போராட்டத்திற்கு, ஆற்றொணா கவலையை போக்க  உதவ கேட்கிறோம்.

கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிக்க விரைவில் உங்கள் உதவியைக் கேட்போம்'' என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து புதிய அமெரிக்க அதிபரை வாழ்த்தும் முகமாக அவரது புகைப்படத்தை தாங்கிய பதாதையையும் மற்றும் அமெரிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் கொடிகளை ஏந்தியவண்ணம் நின்றிருந்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19