சர்க்கரை நோயால் பாதங்கள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிய நவீன பரிசோதனை

09 Nov, 2020 | 06:29 PM
image

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. 

நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விட்டால் பாதங்கள் பாதிக்கப்படும். 

இந்நிலையில், நீரிழிவு நோயால் பாதங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிய எலக்ட்ரோமயோகிராஃபி என்ற புதிய பரிசோதனை முறை அறிமுகமாகி நல்லதொரு பலன்களை வழங்கி வருகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோயால் சிறுநீரகம், கண்கள், இதயம் ஆகிய உறுப்புகளை போல பாதங்களையும் பாதிக்கிறது. 

பெரும்பாலானவர்களுக்கு ஏனைய உறுப்புகளைப் போல பாதங்கள் பாதிக்கப்பட்டால் அவற்றை தொடக்க நிலையில் உணர்வதில்லை. 

ஆகவே, ஆண்டுதோறும் சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை செய்து கொள்ளும்போது, பாதங்களுக்கான பிரத்தியேக பரிசோதனையும் செய்து கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பாதங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை கண்டறிவதற்காக imaging test எனப்படும் ஸ்கேன் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, quantitative sensory testing எனப்படும் உணர்வு தொடர்பான பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை செய்வர். 

சிலருக்கு பாதிப்புகளை துல்லியமாக கண்டறிவதற்காக தற்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் எலக்ட்ரோமயோகிராபி என்ற பரிசோதனையை பரிந்துரைக்கிறார்கள். 

எலக்ட்ரோ பயோகிராபி என்ற  பரிசோதனையின் போது, பாதங்களில் உள்ள கூச்ச உணர்வு, உணர்வின்மை, தசை பலவீனம், தசை வலி, தசை பிடிப்பு, சில வகையிலான மூட்டு வலி ஆகியவற்றை துல்லியமாக கண்டறிய இயலும்.

இதன்பிறகு அவர்களுக்கு எம்மாதிரியான சிகிச்சையை வழங்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் தீர்மானித்து சிகிச்சை அளிப்பார்கள். 

சிலருக்கு பிரத்தியேக காலணிகளையும், காலணி உறைகளையும் அணிய வேண்டும் என பரிந்துரைப்பார்கள். 

சிலருக்கு பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துவார்கள்.

டொக்டர் பார்த்திபன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04