கிழக்கு மாகாண இறைவரித் திணைக்கள ஆணையாளராக வைரமுத்து மகேந்திரநாதன் நியமனம்

09 Nov, 2020 | 06:21 PM
image

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வகுப்பு 1 இல் (Class 1) சிரேஷ்ட  பிரதி ஆணையாளராக இதுவரை கடமையாற்றி வந்த வைரமுத்து மகேந்திரநாதன், கிழக்கு மாகாணத்தின் இறைவரித் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக கடந்த 2ஆம் திகதி முதல் கிழக்கு மாகாண ஆளுனரால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 27 வருடங்களாக இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வரி உத்தியோகத்தர், வரி மதிப்பீட்டாளர், உதவி ஆணையாளர், பிரதி ஆணையாளர், சிரேஷ்ட  பிரதி ஆணையாளர் என பல பதவிகளையும் வகித்துள்ள இவர்  இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் வரி மதிப்பீடு, வரி அறவிடுதல் போன்ற மேலதிக பயிற்சிநெறிகளை நிறைவு செய்திருந்தார்.

மட்டக்களப்பு செட்டிபாளயத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் செட்டிபாளைய மகா வித்தியாலயத்திலும், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் கல்வி பயின்றார்.

இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியும் ஆவார். 

வ. மகேந்திரநாதன் தனது கடமைகளை கிழக்கு மாகாண சபையின் இறைவரித் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06