(வத்துகாமம் நிருபர்)

கண்டி டி.எஸ்.சேனாநாயக்கா நூலக செயற்பாடுகள் 26 இலட்ச ரூபா பெறுமதியான சீனா நாட்டின் உதவியுடன் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது.

கணனி மூலம் தமக்குத் தேவையான புத்தகங்கள் இருக்கிறதா என்பதை அறிந்து அதனை இரவலாகப் பெறும் முறையொன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வழமையாக வாசிக சாலைகளில் புத்தகங்களைத் தேடுதல், அவற்றை இரவலாகப் பெற்றுக் கொள்ளல் போன்ற செயற்பாடுகள் முன்னர் புத்தக இராக்கைகளுக்கு அருகில் சென்று தேட வேண்டிய நிலை இருந்தது.

தற்போது அவை கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக தன்னியக்க அடிப்படையில் பதிவுகள் நடைபெறுகின்றன. எனவே ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பார்க்க வேண்டிய தேவையில்லை.