ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் ‘சீன எதிர்ப்பு பொறிமுறையை’ முற்றாக எதிர்க்கின்றோம்! சீன தூதரக அரசியல் பிரிவுத் தலைவர் விசேட செவ்வி

09 Nov, 2020 | 01:27 AM
image

ஒரேபட்டி ஒரே பாதை முன்முயற்சியில் வடக்கு,கிழக்கினை இணைக்க தயார்

ஆசிய நேட்டோ உருவாகுவதை பார்த்து பொறுத்துத்திருக்க முடியாது 

‘குவாட்டில்’ இலங்கை இணையாது என்ற பெரு நம்பிக்கை எமக்குள்ளது 

மனித உரிமை விவாகாரங்களை  உள்நாட்டிலேயே தீர்க்க வேண்டும்

தமிழ் அரசியல் தரப்புக்கள் மீது ‘வெளியாரின்’ தலையீடுகள் 

வடக்கில் தொல்பொருள் ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

 

கடந்தவார தொடர்ச்சி......

பாகம் 02

நேர்காணல்:- ஆர்.ராம்

படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ‘சீன எதிர்ப்பு பொறிமுறையை’ நாம் முற்றாக எதிர்க்கின்றோம். அவ்விதமான செயற்பாடுகளை பார்த்து பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என்று மக்கள் சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவரும், ஊடகப்பேச்சாளருமான லூ சொங் (Luo Chong) வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார். 

அந்தச் செவ்வியின் இறுதிப்பாகம் வருமாறு, 

கேள்வி:- ஒரேபட்டி ஒரே பாதை முன்முயற்சியில் (டீநடவ யனெ சுழயன ஐnவையைவiஎந) சீனா,  அம்பாந்தோட்டையை மையப்படுத்தியமைக்கான காரணம் என்ன?

பதில்:- ஒரேபட்டி ஒரே பதை முன்முயற்சி சம்பந்தமாக தவறான கருதுகோள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, தனியே சீனாவின் நலன்களை மையப்படுத்திய செயற்பாட்டு ரீதியான திட்டமொன்று அல்ல. சீன ஜனாதிபதி ~p ஜின் பிங் இந்த முன்முயற்சியை முன்மொழிந்துள்ளார் என்பதற்காக அது சீனாவின் திட்டம் என்றாகிவிடாது. இருநாடுகளினது கூட்டில் முன்னெடுக்கப்படும் திட்டமாகும். 

அதனடிப்படையில் தான் அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் முன்மொழிவுகள் மற்றும் சீனாவின் பங்களிப்புக்கள் ஆகியவற்றுடன்  ஒரேபட்டி ஒரேபாதை முன்முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. ஏனைய நாடுகள் முன்னெடுக்கும் திட்டங்களிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டிருக்கின்றது. அந்தவகையில் அம்பாந்தோட்டையை இலங்கை அரசாங்கமே முன்மொழிந்தது. இருப்பினும் மேற்குல சக்திகளால் அது தவறாக மிகைப்படுத்தப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.

ஒரே பட்டி ஒரே பாதை முன்முயற்சியின் கீழ் இலங்கை, சீனா பரஸ்பர முன்மொழிவில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. உதாரணமாக கூறுவதாயின், கொழும்பு துறைமுகத்தினுடைய சர்வதேச கொள்கலன்கள் முனையத்தின் திறனை மேம்படுத்துவதற்காக 90மில்லியன் டொலர்களை சீனா முதலீடு செய்வதற்கு இலங்கையின் அமைச்சரவை அனுமதித்துள்ளது. இவ்விதமான பல திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவுடன் நடைபெறுகின்றது. ஆகவே அம்பாந்தோட்டையை மட்டும் குறிப்பிட்டுக் கூறுவது பொருத்தமல்ல.

கேள்வி:- ஒரேபட்டி ஒரே பாதை முன்முயற்சியில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளை இணைத்துக் கொள்வதற்கு சீனா விரும்புகின்றதா?

பதில்:- இலங்கை அரசாங்கம் தான் அதனை தீர்மானிக்க வேண்டும். இலங்கையின் வடக்கு கிழக்கினையும் இந்த முன்முயற்சிக்குள் உட்கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கம் முன்மொழியுமாக இருந்தால் சீனா ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவே உள்ளது. விசேடமாக அந்த பகுதிகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, இணைப்புக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி அது அமையுமாக இருந்தால் வரவேற்கத்தக்கது. 

கேள்வி:- ஒரே பட்டி ஒரே பாதை முன்முயற்சியினுள் இந்தியாவை இணைத்துக்கொள்வதில் சீனாவுக்கு உள்ள தடைகள் என்ன?

பதில்:- சீனா வெளிப்படைத் தன்மையுடன் தான் உள்ளது. ஆனால் இந்தியாவுக்கு கா~;மீர் பிரச்சினை உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் கரிசனைகள் காணப்படுகின்றன. அதன் காரணத்தினால் இந்தியா ஒரேபட்டி ஒரே பாதை முன்முயற்சியில் பங்குபற்றுவதில் தயங்குகின்றது. ஆனால் தெற்காசிப் பிராந்தியத்தில் இந்தியா தவிர்ந்த ஏனைய அனைத்து நாடுகளும் இந்த முன்முயற்சியின் பங்குதாரர்களாக உள்ளார்கள். வினைத்திறனாக கூட்டுச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.

கேள்வி:- சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் சீனா கரிசனை கொண்டிருக்கின்றதா?

பதில்:- அது இலங்கையின் உள்ளக விவகாரம். கிழக்கு முனைத்தில் சார்ச்சைகள் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாகவே அறிகின்றோம். சில வருடங்களுக்கு முன்னதாக கிழக்கு முனைய அபிவிருத்திக்காக ‘இருதரப்பு கூட்டுறவு உடன்படிக்கைக்கான’ பகிரங்க கோரிக்கை விடுக்கப்பட்டபோது சீன நிறுவனமும் ஆவணங்களை சமர்ப்பித்திருந்தது. ஆனால் கடந்த அரசாங்கம் அந்த ஆவணங்களை ஒரு தடவையேனும் திறந்துகூட பார்க்கவில்லை. பின்னர் அந்த அரசாங்கம் பிராந்திய, அயல் நாடுகளுக்கு வழங்கியது. இருப்பினும் அந்த விடயத்தில் தற்போது வரை சர்ச்சைகள் நீடிப்பதாக அறிகின்றோம். 

அதேநேரம், சீனாவிடத்தில் வழங்கப்பட்ட கொழும்புத் துறைமுக தெற்கு முனையத்தின் பணிகள் முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்கட்ட செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளன. ஆனால் கிழக்கு முனையத்தின் அபிவிருத்திப்பணிகள் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் எந்தவொரு திட்டத்திற்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கும். கிழக்கு முனையத்திற்கும் அது பொருந்தும்.

கேள்வி:- சீன கட்டுமான கூட்டுத்தாபனம் உட்பட 24 நிறுவனங்களுக்கு அமெரிக்க விதித்துள்ள தடையானது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தில் தாக்கம் செலுத்துமா? 

பதில்:- அமெரிக்கா தனது நாட்டில் மட்டுமே இந்த நிறுவனங்களுக்கான தடையை அமுலாக்க முடியும். அதற்கு அப்பால் அமெரிக்காவின் தடைவிதிக்கும் தீர்மானத்தினை அமுலாக்க முடியாது. அவ்வாறு சர்வதேச ரீதியாக அமுலாக்குவதற்கு அமெரிக்காவிடம் எவ்விதமான சர்வதேச சட்டங்களும் இல்லை. ஆகவே இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான விடயங்களில் அமெரிக்காவின் தீர்மானம் தாக்கம் செலுத்தாது. இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளது. அதாவது, துறைமுக நகரம் இலங்கையின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது. அதனை தொடர்வோம் என்பதே அந்நிலைப்பாடாகும். 

கேள்வி:- இந்திய எல்லையான லடாக்கில் பதற்றம் நீடிக்கின்ற நிலையில், இலங்கையுடன் சீனாவின் நெருக்கமான ஊடாட்டம் அந்நாட்டுக்கும், பிராந்தியத்திற்குமான தேசிய பாதுகாப்பு கரிசனையை தோற்றுவிக்கின்றதல்லவா?

பதில்:- அது இந்தியாவினுடைய பிரச்சினை, ஆனால் இந்தியாவின் அந்தக் கரிசனையானது சில சமயங்களில் ‘அதியுச்சமான உணர்பூர்வ’ வெளிப்பாட்டால் ஏற்படுகின்றது. 

கேள்வி:- அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டில் உருவாகியுள்ள  “குவாட்” கூட்டு சீனாவுக்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றதா?

பதில்:- சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வங், குவாட் தொடர்பிலான நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்துள்ளர். அந்த வகையில், ‘சீன எதிர்ப்பு பொறிமுறையை’ நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். சோவியத் யூனியனுக்கு எதிரான பனிப்போர்க்காலத்தில் நேட்டோ உருவாக்கப்பட்டது. 

நேட்டோ என்பது நாடுகளுக்கு இடையில் படைகளை மட்டுமே மையப்படுத்திய கூட்டாகும். தற்போது குவாட்டின் ஊடாக  ஆசிய நேட்டோவை உருவாக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இந்த முயற்சியானது ஆசிய கண்டத்தில் உள்ள தனியொரு நாட்டுக்கு(சீனாவுக்கு) எதிரான நடவடிக்கையாகும். 

ஆகவே ஆசிய நேட்டோவை உருவாக்கும் செயற்பாட்டை பார்த்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. ஆசிய பிராந்தியத்தில் பனிப்போர் ஒன்றை சீனா விரும்பவில்லை. இந்தியாவோ, ஜப்பானோ, அவுஸ்திரேலியாவோ பனிப்போரை விரும்பவில்லை. ஆனால் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தி தமது ஏகாதிபத்தியத்தினை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்காவே முனைகின்றது. அமெரிக்கா 80களில் சோவியத்தில் முன்னெடுத்த மூலோபாயத்தினை தற்போது ஆசியப்பிராந்தியத்தில் செயற்படுத்த விளைகிறது. 

இதனால் ஆசிய நாடுகளுக்கிடையில் முரண்பாடுகளே அதிகரிக்கும். சமதானமும், அபிவிருத்தியும் சிதைந்துபோய்விடும். ஆகவே அவ்விதமான பொறிமுறைகளை ஆசியப்பிராந்தியத்தில் முன்னெடுப்பதற்கு சீனா ஒருபோதும் அனுமதிக்காது.  அதேநேரம், இலங்கை குவாட் கூட்டில் இணைந்து கொள்ளமாட்டாது என்ற பெரும் நம்பிக்கையும் சீனாவுக்கு உள்ளது. 

கேள்வி:- மலபார் கூட்டுப்பயிற்சி தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் இந்தியா, நிக்கோபாரில் இடமாற்று துறைமுகத்தினை அமைக்கவுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- துறைமுகம் அமைப்பது இந்தியாவினுடைய முன்மொழிவாகும். சீனாவைப் பொறுத்தவரையில் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தின் கடற்போக்குவரத்து சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்பதே இறுதியான நிலைப்பாடாகும். அதேநேரம், ஆசியப் பிராந்தியத்தில் யார் படைத்தளங்களை அமைக்கின்றார்கள். யார் பின்னணியில் இருந்து கொண்டு திட்டங்களை முன்மொழிகின்றார்கள் என்று ஆழ்ந்து அவதானியுங்கள். அனைத்துப் பின்னணிகளையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நிச்சயமாக அது சீனாவாக இருக்காது.

கேள்வி:- சீனாவின் உயர்மட்டப் பிரதிநிதியான யங் யிச்சி (லுயபெ துநைஉhi) இலங்கையின் இறைமையை ஜெனீவா மனித உரிமைகள் பேரவை உட்பட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பதற்கு உதவுவதாக கூறியுள்ளார். இதன்மூலம் இலங்கை அரசாங்கத்தினை எந்தவொரு சூழலிலும் பாதுகாக்க சீனா முனைகிறதா?

பதில்:- சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல சர்வதேச தளங்களில் காணப்படும் கூட்டுறவுகள் உயர்மட்டத்திலேயே கடந்த பல தசாப்தங்களாக நீடிக்கின்றது. விசேடமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையுடனான கூட்டுறவுகளைப் பேணும் நாடுகளில் சீனா பிரதான அங்கம் வகிக்கின்றது. ஒரு நாடு பிறிதொரு நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதை சீனா விரும்புவதில்லை. அதனடிப்படையில் தான் சீனா சர்வதேச இராஜதந்திர இருதரப்பு உறவுகளை பின்பற்றி வருகின்றது.

கேள்வி:- இலங்கையின் தேசிய இனக்குழுமமான தமிழர்கள் மனித உரிமை, மனிதாபிமாச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலையும், நீதியையும் எதிர்பார்த்து இருக்கையில் சீனா, இலங்கை அரசாங்கத்தினை மையப்படுத்தி அல்லவா செயற்படுகிறது?

பதில்:- சீனாவினுடைய சர்வதேச உறவுகள் அரசாங்கங்கள் மட்டத்திலேயே அமைகின்றது. அதனை மையப்படுத்தி செயற்படுவதானது ஒரு இனக்குழுமத்திற்கு எதிராக செயற்படுவதாகக் கொள்ள முடியாது. அதேநேரம், உள்விவகாரங்கள் அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது. விசேடமாக மனித உரிமைகள் சார்ந்த விவகாரங்கள் அரசியல் மயப்படுத்தப்படவும் கூடாது. அவை சர்வதேச மயப்படுத்தப்படவும் கூடாது. 

மனித உரிமை உள்ளிட்ட விவகாரங்கள் உள்நாட்டிலேயே முன்னுதாரணங்கள், ஆலோசனைகளுடன் கலந்துரையாடல்கள் ஊடாக தீர்க்கப்பட வேண்டியவை. எமது நாட்டிலும் அவ்வாறே நடைபெற்று வருகின்றது. சீனா ‘ஒரே நாடு’ என்ற கொள்கையை பின்பற்றுகிறது. எமது மக்கள் சர்வதேச நாடுகளோ அல்லது நிறுவனங்களோ என்ன செய்ய வேண்டுமென்று குறித்துரைப்பதை ஒருபோதும் விரும்புவதில்லை. இதுதான் சீனாவின் நிலைப்பாடாகும். 

கேள்வி:- இலங்கையின் தமிழ்த் தரப்புக்களுடன் சீனா வரையறுக்கப்பட்ட இடைவெளியொன்றை பேணிவருவதற்கு விசேட காரணங்கள் உண்டா?

பதில்:- இலங்கை வாழ் தமிழர்களுக்கும், சீனாவுக்கும் இடையில் 2ஆயிரம் வருடங்கள் பழைமைவாய்ந்த நல்லுறவுகள் இருக்கின்றன. மதகுருவும், கல்வியாளருமான ‘சுவான்சாங்’  618ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார். 

அதேநேரம், சீனாவைச் சேர்ந்த கப்பல் தளபதி ‘செங்ஹோ’ திருமலை சீனக் குடாவிற்கு வருகை தந்திருக்கின்றார். அத்துடன் இவரால்  கி.பி. 1410ஆம் ஆண்டு பொருத்தப்பட்ட ‘சிலாசனம்’ காலியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலாசனத்தில் சீனம், பாரசிகம், தமிழ், ஆகிய மொழிகளில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. அது தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி அக்காலத்திலேயே முக்கியத்துவம் அளித்து பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்றால் இருதரப்பு உறவுகளின் பிணைப்பினை உணரமுடிகிறது.

வடக்கு மாகாணத்தின் அல்லைப்பிட்டியில் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வின்போது 600வருட பழமைவாய்ந்த சீனாவின் மட்பாண்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்று விடயங்கள் சீனாவுக்கும் இலங்கைக்கும் அதேநேரம் விசேடமாக தமிழர்களுக்கும் இடையில் நீண்ட உறவுகள் இருந்துள்ளன என்பதை பறைசாற்றுகின்றன.

அதன்பின்னர் மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக தொடர்தேச்சியான உறவுகளை பேணமுடியாது போய்விட்டது. தற்போது நாம் வடக்கு,கிழக்கு, மலையகம் என்ற வேறுபாடுகளின்றி தமிழ் மக்களுடன் உறவுகளை கட்டியெழுப்பி வருகின்றோம். 

அண்மையகாலத்தில் வர்த்தக ரீதியிலான உறவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மன்னாரிலிருந்து தூளாக்கப்பட்ட மீன், கடல் வெள்ளரிகாய் போன்றவை சீனாவுக்கு  ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றுக்கு நல்ல கேள்வியும் இருக்கின்றது. 

கேள்வி:- ஒப்பீட்டளவில் பார்க்கும்போது  போர் நிறைவுக்கு வந்து பத்து ஆண்டுகளில் வடக்கு,கிழக்கு, மலையகம் தொடர்பில் குறைந்தளவான கரிசனைகளையே சீனா வெளிப்படுத்தியுள்ளதே?

பதில்:- போரின் பின்னரான சூழலில் நெடுஞ்சாலைகள் அமைப்பு, பாலங்கள் புனரமைப்பு பணிகளில் சீன நிறுவனங்கள் பங்களிப்புச் செய்துள்ளன. அதனைவிட கடல்சார் விடயங்களிலும் உதவிகளை சீனா வழங்கியுள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதர செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். மேலும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.

இங்கு கவலையளிக்கும் விடயமொன்றை குறிப்பிட வேண்டியிருக்கின்றது. விசேடமாக வடக்கு மாகாணத்தில் சீனா முதலீகளைச் செய்வதற்கு “வெளியாரினால்” திட்டமிட்டு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. வடக்கில்  மக்களுக்காக 40ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டமொன்றை சீன நிறுவனம் முன்மொழிந்திருந்தது. 

அதற்கான அனைத்து செயற்பாடுகளும் பூர்த்தியாகியிருந்த நிலையில், “அரசியல் நலன்கள்” காரணமாக அத்திட்டம் நிராகரிக்கப்பட்டது. வடமாகாண அரசியல் பிரதிநிதிகளுக்கு “வெளியாரால்” வழங்கப்பட்ட அழுத்தமே அதன் பின்னணியில் காணப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக மக்களுக்கான நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படாது போகின்றமை துரதி~;டவசமானது.  

கேள்வி:- வடக்கு, கிழக்கு, மலையக அரசியல் பிரதிநிதிகளுடன் தொடர்ந்திருக்க கூடிய சுமுகமான உறவுகளை கட்டியெழுப்புவதற்கு ஏன் முனையவில்லை?

பதில்:- சீனா வெளிப்படைத் தன்மையுடனே நடந்துகொள்கின்றது. அனைத்து மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு சீனா தயாராகவே உள்ளது. அதற்காக வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றில் பொருத்தமான சூழல் அமையவேண்டும் என்று எதிர்பார்கின்றது. அரசியல் தரப்புக்களின் பின்னடிப்புக்களுக்கு “வெளியாரின்” தலையீடுகளே காரணம். அது உள்நாட்டு விவகாரத்துடன் தொடர்புடையது. அதுபற்றிய என்னால் கூறமுடியாது. சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் அனைத்து இன குழுமத்துடன் வரலாற்று ரீதியான நல்லுறவை தொடர்ந்தும் வலுவாக பேணி வருகின்றது. இதில் எவ்விதமான பாரபட்சங்களும் இல்லை. 

கேள்வி:-   ஷாங்காய் அருங்காட்சியகம் மற்றும் இலங்கையின் மத்திய கலாசார மன்றத்தின் கூட்டிணைவில் 2018இல் அல்லைப்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் போது சீன மட்பாண்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் அதுதொடர்பான அடுத்த கட்டம் என்ன? 

பதில்:- இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நாகரீக, கலாசார, பண்பாட்டுத் தொடர்புகள் காணப்படுகின்றன. அவை மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டியுள்ளன. ஆகவே அவைபற்றிய ஆய்வுகள் அவசியமாகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், உள்நாட்டு தேர்தல்கள், கொரோனா பரவல் போன்றவற்றால் அச்செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நிலைமைகள் வழமைக்கு திரும்பியதும் நிச்சியமாக அச்செயற்பாடுகள் மீளவும் தொடரப்படும். ‘மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை பரிமாற்றும்’ கோட்பாட்டின் அடிப்படையில் அப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன  

பாகம் 01

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13