போராட்ட களமாக மாறிய அமெரிக்க அரசியல்

08 Nov, 2020 | 11:49 PM
image

-ஆர். ஹஸ்தனி-

அமெரிக்க அரசியல் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத நெருக்கடி நிலையத் தோற்றுவித்துள்ள தேர்தலாக கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் உள்ளது. வழமையாக தேர்தல் நிறைவுபெற்று ஒரு சில மணித்தியாலங்களில் வெற்றியாளர் உறுதிசெய்யப்பட்டு அனைத்தும் சுமுகமாக நடந்தேறுகின்ற நிலையில் இந்தத் தேர்தலில் எல்லாமே தலைகீழாகியுள்ளன. அமெரிக்க ஜனநாயக தேர்தல் முறைமையை கேள்விக்கிடமான இடத்தில் வலிந்து நிறுத்திய தேர்தலாக இது மாறியுள்ளது.

ஒரு சில மணித்தியாலங்களில் வெளிவரும் தேர்தல் பெறுபேறு நாட்கணக்கில் தாமதமாகின்ற நிலையில் முக்கிய மாநிலங்களிலான வாக்கெடுப்புகளில் தனக்கான வெற்றிக் கனி தொடு தூரத்தில் தென்பட ஆரம்பித்ததையடுத்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தனது நிலைப்பாடு குறித்து மக்களுக்கு  தெரியப்படுத்தும் வகையில் வில்மிங்டன் நகரிலுள்ள சேஸ் நிலையத்தின் வெ ளியரங்கு மைதானத்தில் தனது உரையை ஆற்றத் தயாராகி வருவதாக அவரது பிரசார குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் அவர்  இதன்போது தான் தேர்தலில்  வெற்றி பெற்றுள்ளதாக பிரகடனப்படுத்தவுள்ளதாக   தகவல்கள் வெளியான நிலையில்  அவர் தனது வெற்றிப் பிரகடனத்தைத் தாமதப்படுத்தியுள்ளதாக பின்னர் வெளியான செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் வெலிங்டன் நகரில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் அவர் தனது  தேர்தல் நிலைமைகள் தொடர்பில் மட்டுமே  உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்;போ தேர்தல் பெறுபேறுகளை  ஏற்க தொடர்ந்து மறுத்து வருகிறார்.

அவர் ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலிலான வெற்றியை தவறாக உரிமை கோரக் கூடாது எனவும்  தன்னாலும் அவ்வாறு  வெற்றியை உரிமை கோர முடியும்  எனவும்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எவரும் எதிர்பார்க்காத அடாவடித்தனமாக நடவடிக்கைகளை அதிரடியாக எடுப்பதற்கு பெயர் போனவரான ட்ரம்ப்   இந்தத் தேர்தலையும் விட்டு வைக்காததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றுதான் கூற வேண்டும்.

தேர்தல் பெறுபேறுகள் வெளிவந்து ஜோ பைடன் மாநில ரீதியில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்துக் கொண்டு  வெற்றியை உறுதிசெய்வதற்கான 270 வாக்காளர்கள் குழு வாக்குகளை நெருங்கி முன்னேறிக்கொண்டிருந்த வேளையில் அதற்கு மேலும் பொறுக்க முடியாத ட்ரம்ப், உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பது  என களத்தில் குதித்தார். 

அவரது இந்த செயற்பாட்டால் தேர்தல் பெறுபேறுகள் வெ ளிவருவது  என்றுமில்லாத தாமதத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில்  ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் அதிகளவு வாக்காளர் குழு வாக்குகளை வழங்கும் பென்;சில்வேனியா  மற்றும் அரிஸோனா ஆகிய மாநிலங்களில் பெற்ற  வாக்குகளின் தொகையில்  ஜோ பைடன் ட்ரம்ப்பை விஞ்சியுள்ள நிலையில் அவர் வெற்றியை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் ஏனைய இரு முக்கிய மாநிலங்களான நெவாடா மற்றும் அரிஸோனாவிலும் பைடன் வெற்றியைத் தொடும் நிலையை எட்டியுள்ளார். இத்தகைய சூழ்நிலையிலேயே பைடன் தனது வெற்றியை எச்சமயத்;திலும் அறிவிக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் டொனால்ட் ட்ரம்பின் தபால் மூல வாக்கெடுப்பிலான மோசடி தொடர்பான  முறைப்பாட்டையடுத்து அமெரிக்க உச்ச நீதிமன்றம்  பென்சில்வேனியா மாநிலத்தின் அனைத்து பிந்திய தபால் மூல வாக்குகளும்  தனியாக எண்ணப்பட வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்  இவ்வாறான நிலைமையொன்றை எதிர்ப்பார்த்தே  தீர்க்கதரிசனத்துடன் தேர்தலுக்கு முன்னர் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையை உறுதி செய்யும் வகையில் அந்த நீதிமன்றத்தின் மரணமான நீதிபதியொருவரின்  இடத்திற்கு புதிய நீதிபதியொருவரை நியமித்திருந்தார் என்பது கண்கூடு.

இத்தகைய சூழ்நிலையில் ட்ரம்ப் மேலும் பல மாநிலங்களிலான வாக்கெடுப்புகளில் மோசடி இடம்பெற்றுள்ளதாக  தெரிவித்து அந்த மாநிலங்களிலும் வாக்குகளைத் திரும்ப எண்ண சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். பிந்திய தரவுகளின் பிரகாரம் 253 வாக்காளர் குழு வாக்குகளைப் பெற்றுள்ள  ஜோ பைடன்   தனது வெற்றியை உறுதி செய்வதற்கான  270 வாக்காளர் குழு வாக்குகளை இரண்டு வழிமுறையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

பென்சில்வேனியா மாநிலத்தில் அவரது வெற்றி உறுதியானால்  அவர் 20 வாக்காளர் குழு வாக்குகளைப் பெற்று ஏனைய மாநிலங்களின்  வாக்குகளின் பெறுபேறுகள் வருவதற்கு முன்னர் வெற்றியை உறுதிசெய்து கொள்ள முடியும். அதேசமயம் அவர் பென்சில்வேனியாவிலான வெற்றியை இழக்கும் பட்சத்திலும் 11 வாக்காளர் குழுக்களைக் கொண்ட அரிஸோனா மற்றும்  6 வாக்காளர் குழுக்களைக்  கொண்ட நெவாடா மாநிலங்களில் வெற்றி பெற்றால்  அந்த இரு மாநிலங்களினதும் கூட்டான வெற்றி அவர் வெ ள்ளை மாளிகை செல்வதை  உறுதிப்படுத்தும்.

டொனால்ட் ட்ரம்ப்பைப் பொறுத்தவரை தொடர்ந்து தான் வெற்றியாளர் என வாதிடுவதில் பிடிவாதமாகவுள்ளார். தன்னை வெ ள்ளை மாளிகையிலிருந்து வெ ளியேற்றுவதற்கு தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சதியொன்றால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மோசடி நடவடிக்கையின் அங்கமாகவே வாக்குகள் எண்ணப்படுவது இடம்பெற்று வருவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார். சட்டபூர்வமான வாக்குகள் எண்ணப்படுகையில் தானே வெற்றியாளர் என அவர் உரிமை கோரி வருகிறார்.

இந்தத் தேர்தல் தனியொரு தேர்தல் அல்ல எனவும் இது முழு தேர்;தல் செயற்கிரமங்கள் தொடர்பான நாணயம் பற்றியது எனவும் தான் ஆரம்பத்திலிருந்தே அனைத்து சட்டபூர்வமான வாக்குகளும் எண்ணப்பட்டு சட்டபூர்வமற்ற வாக்குகள் எண்ணப்படக் கூடாது என வலியுறுத்தி வந்ததாகவும் சட்டபூர்வ வாக்குகள் எண்ணப்படுகையில் தானே வெற்றியாளர் என்பது நிச்சயமாகும் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

இந்நிலையில் அவரது வெ ள்ளை மாளிகை உள்வட்டாரங்கள் அவரை தோல்வியை எவ்வாறு ஏற்றுக் கொள்ள வைப்பது எனத் திணறி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மகனான டொன் ட்ரம்ப் மற்றும் எறிக் ட்ரம்ப் ஆகியோர் எரியும் எண்ணெயில் எண்ணெய் வார்ப்பது போன்று டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் தொடர்பான போராட்டத்தைக் கைவிடக் கூடாது எனவும் அவர் இறுதி வரை தனது போராட்டத்தைத் தொடர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

தேர்தல் தொடர்பில் ட்ரம்பின்  விதண்டாவாத  போக்கால் தேர்தல் பெறுபேறுகள் வெ ளிவருவது தாமதப்படுத்தப்பட்டு காலவிரயமும் பண விரயமும் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது சொந்தக்  குடியரசுக்  கட்சியைச் சேர்ந்;த உறுப்பினர்கள்  பலர்  அவரது செயற்பாடுகள் குறித்து முகம் சுழிக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.   

ஆனால் ட்ரம்போ எதையும்  கவனத்தில் எடுத்துக் கொள்ளாது தேர்தல் பெறுபேறுகளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப் போவதில்லை என  சூளுரைத்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில் தேர்தல் பெறுபேறுகள் வெளியாகி ஜோ பைடனின் வெற்றி உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் ட்ரம்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன. வழமையான அரசியல் நகர்வுகளிலேயே திடீர் திருப்பங்கள்  இடம்பெறுவது சகஜம் என்பதால்  என்றுமில்லாதவாறு சிக்கல்; நிலைக்குள் சிக்கியுள்ள அமெரிக்க அரசியலில்  அடுத்து என்ன இடம்பெறவுள்ளது என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04